அகமதாபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் மற்றும் அரைஇறுதி சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், இன்று (நவ. 19) கிளைமாக்ஸ் காட்சி அரங்கேற்றம் நடைபெறுகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
போட்டிக்கு முன்னதாக மைதானத்தில் குழுமியிருக்கும் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் கண்கவர் வான் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெண்ணிற புகையை கக்கிக் கொண்டு சென்ற விமானங்களை கண்டு பொது மக்கள் குஷி அடைந்தனர்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் இன்னிங்சை தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடங்கினர். சுப்மன் கில் நிதானமாக விளையாடிக் கொண்டு இருந்த நேரத்தில் மறுபுறம் ரோகித் சர்மா அடித்து ஆடத் தொடங்கினார்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய சுப்மன் கில் இந்த முறை பெரிய அளவில் சோபிக்கவில்லை. கில் 4 ரன் எடுத்து இருந்த போது மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆடம் ஜம்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரோகித் சர்மா நீடிக்கவில்லை.
கிளென் மேக்ஸ்வெல் பந்தில் ரோகித் சர்மா 47 ரன் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை, 4 ரன் மட்டும் எடுத்து வந்த வேகத்தில் நடையை கட்டினார். இதனால் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலியுடன், இணைந்து கே.எல் ராகுல் அணியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
25 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி ரன்கள் எடுத்து உள்ளது. விராட் கோலி 51 ரன்னும், கே.எல்.ராகுல் 35 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். குழுமியிருக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் மாயாஜாலத்தை காட்ட வேண்டிய சூழலில் இந்திய வீரர்கள் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விராட் கோலி அடித்த அரைசதம், அவரது ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அடித்த 72வது அரைசதமாகும். அதேபோல் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் அடித்த 9வது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி 9வது அரைசதங்களுக்கு மேல் தொடர்ந்து அடித்து உள்ளார்.
-
9⃣th FIFTY-plus score in #CWC23! 👏 👏
— BCCI (@BCCI) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
7⃣2⃣nd FIFTY in ODIs! 👌 👌
Virat Kohli continues his impressive run of form as #TeamIndia move past 130 in the #Final.
Follow the match ▶️ https://t.co/uVJ2k8mWSt#MenInBlue | #INDvAUS pic.twitter.com/TMYYiJNeja
">9⃣th FIFTY-plus score in #CWC23! 👏 👏
— BCCI (@BCCI) November 19, 2023
7⃣2⃣nd FIFTY in ODIs! 👌 👌
Virat Kohli continues his impressive run of form as #TeamIndia move past 130 in the #Final.
Follow the match ▶️ https://t.co/uVJ2k8mWSt#MenInBlue | #INDvAUS pic.twitter.com/TMYYiJNeja9⃣th FIFTY-plus score in #CWC23! 👏 👏
— BCCI (@BCCI) November 19, 2023
7⃣2⃣nd FIFTY in ODIs! 👌 👌
Virat Kohli continues his impressive run of form as #TeamIndia move past 130 in the #Final.
Follow the match ▶️ https://t.co/uVJ2k8mWSt#MenInBlue | #INDvAUS pic.twitter.com/TMYYiJNeja
இதையும் படிங்க : LIVE :IND Vs AUS : விராட் கோலி அரைசதம்!