ETV Bharat / sports

ஆஸ்திரேலியா அணி நிச்சயம் இந்தியாவை வீழ்த்தும்: ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் - ஜஸ்டின் லாங்கர்

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அணியை நிச்சயம் ஆஸி., வீழ்த்தும் என பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

weve-got-the-team-to-beat-india-this-time-australia-coach-justin-langer

author img

By

Published : Oct 30, 2020, 8:18 PM IST

சென்ற முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி வரலாற்று வெற்றிப்பெற்று தொடரை வென்று சாதனை படைத்தது. இதனால் இம்முறை இந்திய அணியின் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் இம்முறை ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனால் ஆஸ்திரெலிய அணி இந்திய அணிக்கு சரிசமமாக அமைந்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், ''முதல் ஒருநாள் தொடர் நடக்கும் அன்றைய தினமே ஆஸ்திரேலிய அணியை சந்திப்பேன் என நினைக்கிறேன். அதனால் தயாராவதற்கு நேரம் இல்லை. ஆனால் ஐபிஎல் தொடரிலிருந்து சில பயிற்சியாளர்கள் வருகிறார்கள். மெக்டொனால்டு உள்ளிட்ட பயிற்சியாளர்கள் ஆஸி. வீரர்கள் தயார் செய்வார்கள். இந்த முறை நிச்சயம் இந்திய அணியை ஆஸ்திரேலியாவால் வீழ்த்த முடியும்'' என்றார்.

ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்

ஆஸ்திரேலிய அணியில் புதிதாக இடம்பெற்றுள்ள கேம்ரூன் க்ரீன் என்ற வீரர் பற்றிய பேச்சுக்கள் அதிகமாக எழுந்துள்ளது. இவரை பாண்டிங் போன்ற ஜாம்பவான் வீர்ரகளுடன் ஒப்பிட்டு வருவதால் இவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான தொடர் நவ.27ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிக் பேஷ் தொடரில் ஆடுவதற்கு சாத்தியமே இல்லை: ஸ்டீவ் ஸ்மித்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.