ETV Bharat / sports

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித் ஷர்மா! - rohit about boult

தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா தேர்வு செய்யப்படாததால் ரசிகர்களிடையே எழுந்த சர்ச்சைக்கு, தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

hamstring-getting-better-keeping-fingers-crossed-for-australia-rohit

author img

By

Published : Nov 21, 2020, 7:14 PM IST

இந்தியா கிரிக்கெட்டில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் போட்டிகளின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா. ஐபிஎல் தொடரின்போது இவருக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர் ஆஸி. தொடருக்குத் தேர்வுசெய்யப்படவில்லை.

அதேபோல் இந்திய அணியின் புதிய துணைக் கேப்டனாக கே.எல். ராகுல் அறிவிக்கப்பட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து ரோஹித் ஷர்மாவும் தன் பங்கிற்கு ட்விட்டர் பக்கத்தில் இருந்து இந்தியன் கிரிக்கெட்டர் என்ற பயோவை நீக்கி சர்ச்சையை கிளப்பினார்.

இதனால் இந்திய அணியிலிருந்து ரோஹித் ஷர்மா ஓரங்கட்டப்படுகிறார் என்ற பேச்சு ரசிகர்களிடையே எழுந்தது. இதனிடையே நேற்று ரோஹித் ஷர்மா பெங்களூருவின் தேசிய கிரிக்கெட் அகாதமிக்கு வந்தடைந்தார். அங்கு அவரின் காயத்திற்கு சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது.

இதைப்பற்றி அவர் பேசுகையில், ''உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் பேசுவது எனக்குப் புரியவில்லை. நான் தொடர்ந்து பிசிசிஐ உடனும், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்துடனும் தொடர்பில் இருந்தேன்.

டி20 வகைப் போட்டி என்பதால் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகிகளிடம், என்னால் களம் காண முடியும் என்று கூறினேன். ஐபிஎல் இறுதிப்போட்டியில் காயத்துடன்தான் பங்கேற்றேன். எனக்கு காயம் ஏற்பட்ட பின்னர், அடுத்த என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.

தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் இப்போது நன்றாக உள்ளது. மீண்டும் வலிமையாக உணரத் தொடங்கியுள்ளேன். டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்கு முன்னதாக நான் மன ரீதியாக தயாராக வேண்டும். அதனால் தேசிய கிரிக்கெட் அகாதமிக்கு திரும்பியுள்ளேன்.

நீங்கள் பேசுபவை பற்றி எனக்கு எதுவும் தேவையில்லை. ஏனென்றால் நான் ஆஸி. செல்வது உறுதியில்லை. தற்போது ஒவ்வொரு நாளிலும் காயத்தின் தன்மை குறைந்துவருகிறது.

அடுத்த 25 நாள்கள் நான் என் உடலுடன் நேரம் செலுத்தும்போது காயம் வேகமாக குணமடையும் என நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளில் ஆடுவேன் என நினைக்கிறேன். இது எனக்கு எளிதான முடிவாக தான் இருக்கிறது. மற்றவர்களுக்கு ஏன் இது சிக்கலாக உள்ளது என தெரியவில்லை.

மும்பை அணியின் வெற்றிகளுக்கு ஹர்திக், பொல்லார்ட், பும்ரா இருக்கிறார்கள் என்பதால் வெற்றிபெறுகிறது என்கிறார்கள். சிலர் ரோஹித் வேறு அணியை வைத்து வெற்றிபெற முடியுமா என பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில், நான் ஏன் மற்ற அணிகளை வைத்து வெற்றிபெற வேண்டும்.

ஒரு வீரராகவும் சரி, கேப்டனாகவும் சரி... மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் எந்த வழியில் செல்ல வேண்டும் என நினைக்கிறதோ, அந்த வழியில் தான் நானும் செல்ல வேண்டும் என நினைக்கிறேன்.

இந்த ஒரே இரவில் கட்டமைப்பட்ட அணி அல்ல. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகத்தினரும் அதை ஏற்க மாட்டார்கள். ஒவ்வொரு வீரரையும் ஏலத்தில்தான் எடுக்கிறார்கள். நான் உள்பட அனைவரையும். அப்படித்தான் அணியை மும்பை இந்தியன்ஸ் கட்டமைக்கிறார்கள்.

போல்ட்டை நினைத்துப் பெருமையாக உள்ளது. கடந்த வருடம் அவர் டெல்லி அணிக்காக ஆடினார். அதற்கு முன்னால் ஹைதராபாத் அணிக்காக ஆடினார். எங்களுக்கு பவர் ப்ளே ஓவர்களில் விக்கெட்டுகள் வீழ்த்த ஒரு வீரர் தேவைப்பட்டார். அதனால் டெல்லியிடமிருந்து ட்ரேட் செய்துகொண்டோம்.

மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் எங்களுக்கு ஐபிஎல் தொடரில் நல்ல சூழலை கொடுத்தது. 80 நாள்கள் பயோ பபுள் சூழலில் இருந்தது போல் தெரியவில்லை. ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்துகொடுத்தார்கள். இந்தத் தொடருக்கான தொடக்கத்தை ஜூன் மாதத்திலேயே செய்தோம்.

சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்குத் தேர்வுசெய்யப்படவில்லை. அந்த நிமிடத்தில் நான் அங்குதான், அவரோடுதான் இருந்தேன். ஆனால் நான் அதைப்பற்றி அவரிடம் பேசவில்லை. அவராகவே என்னிடம் வந்தார். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். இந்தச் சூழலில் இருந்து வெளியேறி, மும்பை அணிக்காக நிச்சயம் வென்று கொடுப்பேன் என்றார்.

அவர் அந்த வார்த்தைகளைக் கூறியபோது, அவர் சரியான வழியில் சென்றுகொண்டிருக்கிறார் என்று நினைத்தேன். ஐபிஎல் தொடரில் மட்டுமல்ல, அவருடைய எதிர்காலத்திற்கான பாதையிலும் சரியாகச் செல்கிறார். இன்னும் இந்திய அணி ஏராளமான போட்டிகளில் ஆடப் போகிறது. அவருக்கான நேரம் வரும்'' என்றார்.

இதையும் படிங்க: கரோனா காரணமாக தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாமல் தவிக்கும் சிராஜ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.