ETV Bharat / sports

Ind Vs Aus: அக்சர், அஷ்வின் அபார பேட்டிங்கில் சரிவிலிருந்து மீண்டது இந்தியா!! - nathan lyon

ஆஸ்திரேலியா எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 18, 2023, 9:11 PM IST

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று (பிப். 17) தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விக்கெட் இழப்பின்றி 21 ரன்களுடன் இன்று 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி ஆரம்பக் கட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அபார பீல்டிங்கால் திணறியது.

17 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் லியான் பந்தில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டானார். நிதானமாக விளையாடிய ரோகித்தும் 32 ரன்களுக்கு லியான் பந்துவீச்சில் போல்டானார். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்க துவங்கியதால் லியான் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் திணறினர். தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய புஜாரா லியான் சுழலில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்களுக்கு நடையை கட்ட இந்திய அணி 66 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. அடுத்து களமிறங்கிய ஜடேஜா கோலியுடன் சேர்ந்து பொறுமையாக ஆடினார். இந்த ஜோடி 5ஆவது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்த நிலையில் மர்பி பந்தில் அவுட்டானார். சொந்த மண்ணில் சாதிப்பார் என ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் விளையாடிய கோலி 44 ரன்களுக்கு சர்ச்சைக்குரிய முறையில் குனேமன் பந்தில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டானார்.

கோலியின் விக்கெட் இந்திய இன்னிங்ஸில் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்த வந்த பரத் லியான் பந்தில் ஸ்விப் ஷாட் ஆட முயற்சித்த போது ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதன் மூலம் லியான் 5 விக்கெட்களை கைப்பற்றினார். அடுத்த ஜோடி சேர்ந்த் அஷ்வின், அக்சர் பட்டேல் ஜோடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் விளையாடியது.

அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்து அதிரடியாக விளையாடினர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்த நிலையில் அஷ்வின் 37 ரன்களுக்கு கம்மின்ஸ் பந்துவீச்சில் ஸ்கொயர் லெக் திசையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 74 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் பட்டேல் பவுண்டரி அடிக்க முயற்சி செய்து மர்பி பந்துவீச்சில் அவுட்டாக இந்திய அணி ஆஸ்திரேலியாவை விட ஒரு ரன் குறைவாக 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பிறகு 2ஆவது இன்னிங்ஸில் 1 ரன் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் ஷமி பந்துவீச்சில் அடுத்தடுத்து பவுண்டரிகளாக விளாசினார். 5வது ஓவரை வீச வந்த ஜடேஜா சுழலில் கவாஜா 6 ரன்களில் அவுட்டானார்.

2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. டிராவிஸ் ஹெட் 39 ரன்களுடனும், லபூஷென் 16 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். முன்றாவது நாள் முதல் ஆடுகளம் அதிகமாக சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

இதையும் படிங்க: CCL 2023: சென்னை ரைனோஸ் Vs மும்பை ஹீரோஸ் இன்று மோதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.