அகமதாபாத்: உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ஐசிசி உலக கோப்பை இன்று (அக்.05) தொடங்கியது. இதன் முதல் போட்டியில், நடப்பு சாம்பினான இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அணி எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 282 ரன்கள் மட்டுமே எடுத்தது.
-
Men's @cricketworldcup debut ✅
— ICC (@ICC) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Maiden ODI ton ✅@aramco POTM ✅
What a day for Rachin Ravindra 🌟#CWC23 #ENGvNZ pic.twitter.com/YHx5Kn1VHF
">Men's @cricketworldcup debut ✅
— ICC (@ICC) October 5, 2023
Maiden ODI ton ✅@aramco POTM ✅
What a day for Rachin Ravindra 🌟#CWC23 #ENGvNZ pic.twitter.com/YHx5Kn1VHFMen's @cricketworldcup debut ✅
— ICC (@ICC) October 5, 2023
Maiden ODI ton ✅@aramco POTM ✅
What a day for Rachin Ravindra 🌟#CWC23 #ENGvNZ pic.twitter.com/YHx5Kn1VHF
அதனைத் தொடர்ந்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்டது நியூசிலாந்து அணி தொடக்க வீரரான வில் யங் டங் அவுட் ஆனார். அதன் பின் களம் புகுந்தார் ரச்சின் ரவீந்திரா. இவர் கான்வேவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டம் ஆடினார்.
பின்னர் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசினர். 82 பந்துகளில் சதம் விளாசிய ரச்சின், இதன் மூலம் நியூசிலாந்து அணிக்காக உலக கோப்பை போட்டியில் வேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அதே போல் உலக கோப்பை தொடரில் அறிமுக அட்டத்தில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். முதல் இடத்தில் விராட் கோலி உள்ளார்.
-
A scintillating maiden hundred from young sensation Rachin Ravindra drives the New Zealand chase 🎉@mastercard milestones moments 🏏#CWC23 | #ENGvNZ
— ICC (@ICC) October 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Details 👉 https://t.co/W7jLpfcuNm pic.twitter.com/wNFD4AEYWn
">A scintillating maiden hundred from young sensation Rachin Ravindra drives the New Zealand chase 🎉@mastercard milestones moments 🏏#CWC23 | #ENGvNZ
— ICC (@ICC) October 5, 2023
Details 👉 https://t.co/W7jLpfcuNm pic.twitter.com/wNFD4AEYWnA scintillating maiden hundred from young sensation Rachin Ravindra drives the New Zealand chase 🎉@mastercard milestones moments 🏏#CWC23 | #ENGvNZ
— ICC (@ICC) October 5, 2023
Details 👉 https://t.co/W7jLpfcuNm pic.twitter.com/wNFD4AEYWn
இந்த போட்டியின் இறுதியில் கான்வே 152 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 123 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
23 வயதான ரச்சின் ரவீந்திரா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி பெங்களூரில் வேலை செய்தார். இவர் அங்கேயே கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடி உள்ளார். பின்னர் நியூசிலாந்துக்குப் புலம் பெயர்ந்தார். கிரிக்கெட் மீதுள்ள திரா காதல் காரணமாகத் தனது மகனுக்கு ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயரை சேர்த்து ரச்சின் என பெயர் வைத்தார்.
இதையும் படிங்க: நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை விளாசிய நியூசி., வீரர்கள்.. கான்வே, ரவீந்திரா சதத்தால் அபார வெற்றி!