சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் புதிய தலைவராக கிரேக் பார்க்லே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் கிரிக்கெட்டின் எதிர்கால திட்டங்கள் பற்றி பேசுகையில், '' உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கப்பட்டதற்கான திட்டம் நிறைவேறவில்லை. கரோனா வைரஸ் பாதிப்பால் பல குழப்பங்கள் நிகழ்ந்துள்ளது.
தற்போதைய கிரிக்கெட் காலெண்டரின் படி நியூசிலாந்து கிரிக்கெட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சில கிரிக்கெட் வாரியங்கள் ஆர்வமாக இருப்பதில் ஆச்சரியமாக உள்ளது. அதைப் பொறுத்தவரையில் பலருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளதாக கருதுகின்றனர். ஆனால் நான் அதனை ஒத்துக் கொள்ள மாட்டேன்.
சில கிரிக்கெட் வாரியங்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதில் சில பிரச்னைகள் உள்ளது. ஏனென்றால் பொருளாதார சூழலை வைத்து பார்க்கும்போது, டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதில் பலருக்கும் தடுமாற்றம் உள்ளது. ஆனால் அனைத்து நாடுகளும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் தீவிர கவனம் செலுத்துவது மகிழ்ச்சியை அளிக்கிறது.
கிரிக்கெட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஐபிஎல், பிபிஎல், சிபிஎல் ஆகிய தொடரில் முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போது வீரர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசிவிட்டோம். ஆனால் இன்னும் முழுமையாக ஆலோசனை மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது.
ஐசிசி தொடர்கள் நிச்சயம் நடத்தப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால் சில உறுப்பு நாடுகளின் வளர்ச்சியும் முக்கியம். அதனால் இருதரப்பு தொடரில் கவனம் செலுத்தப்படும். இந்திய கிரிக்கெட் வளர்ச்சி ஐசிசிக்கு முக்கிய தேவையாக உள்ளது. உலக கிரிக்கெட்டிற்கும் இந்தியாவின் தேவை உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இருநாடுகளுக்கும் இருநாட்டு வீரர்களும் சுற்றுப்பயணம் செய்து விளையாட வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: மேட்ச் ஜெய்க்கலனா என்னபா... இதயத்தை வென்ற இந்திய இளைஞர்...!