ETV Bharat / sports

'இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் நிச்சயம் நடைபெறும்' - கங்குலி உறுதி

author img

By

Published : Jul 12, 2020, 1:58 PM IST

டெல்லி: வரும் டிசம்பர் மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நிச்சயம் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

bcci
bcci

கரோனா தொற்று காரணமாக கடந்த நான்கு மாதங்களாக ஒத்திவைக்கப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், கடந்த 8ஆம் தேதி இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் தொடர் மூலம் மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, ”விராட் கோலி தலைமையிலான இந்தியா அணி திட்டமிட்டப்படியே, வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளது. அச்சமயத்தில் ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் குறையும் என நம்பிக்கையுடன் உள்ளோம்‌. நீண்ட தூரம் பயணித்து இரண்டு வாரம் ஹோட்டல் அறையில் வீரர்கள் தனிமைப்படுத்தலில் இருந்தால் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள்.

இது ஒரு கடினமான தொடராக இருக்கும். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொடர் போல் இருக்கப்போவதில்லை. ஆஸ்திரேலியா அணி வலுவான நிலையில் இருந்தாலும், இந்தியா அணியின் பேட்டிங், பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும். விராட் கோலியிடம் ஆஸ்திரேலியா தொடரில் நீங்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்று மட்டும் நான் சொல்லவில்லை. இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்று கூறியுள்ளேன்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.