இந்திய கிரிக்கெட் அணியின் கோலி தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். ’ரன்மெஷின்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கோலி, சர்வதேச அரங்கில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியின் முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய கோலி 76 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், அந்நிய மண்ணில் சர்வதேச கிரிக்கெட்டில் 9000 ஆயிரம் ரன்களை குவித்த நான்காவது ’ஆசிய வீரர்’ என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் (இந்தியா), டிராவிட் (இந்தியா), சங்ககரா (இலங்கை) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
அந்நிய மண்ணில் 9000 ரன்களை குவித்த ஆசிய கிரிக்கெட் வீரர்களின் விவரம்:
- சச்சின் - 12, 616 ரன்கள்
- டிராவிட் - 10, 711 ரன்கள்
- சங்ககரா - 9593 ரன்கள்
- கோலி - 9056 ரன்கள்
இம்முறை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இஷாந்த் ஷர்மாவின் அரைசதம், அனுமா விஹாரியின் சதம், பும்ராவின் ஹாட்ரிக் விக்கெட் ஆகியவற்றால், கோலியின் இந்த சாதனை கண்டுகொள்ளாமல் போனது வருத்தமளிக்கிறது.