வங்க கடலில் மையம் கொண்டிருந்த ஆம்பன் புயல் நேற்று (மே 20) மாலை மேற்கு வங்கம்-வங்கதேசத்துக்கு இடையே கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு 190 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசியதுடன், கனமழை பெய்ததால் ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. இப்புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பிரார்த்தனை செய்வதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரின் ட்விட்டர் பதிவில், ”ஆம்பன் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒடிசா, மேற்கு வங்க மாநில மக்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். கடவுள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாத்து, அவர்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுசெல்வார் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க:கடலில் மூழ்கி முன்னாள் நட்சத்திர மல்யுத்த வீரர் ஷாட் காஸ்பார்ட் உயிரிழப்பு!