ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில் போட்டி முடிவுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில், கடந்த 18 மாதங்களில் எங்கள் அணியில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஸ்மித், வார்னர் போன்ற வீரர்கள் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் லபுசாக்னேவின் ஆட்டம் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியா அணியில் தற்போது லபுசாக்னே, வார்னர், பர்ன்ஸ், ஸ்மித் ஆகியோர் அதிரடியான பார்மில் உள்ளதால் எங்களது அணி சமீப காலமாக வளர்ச்சியை நோக்கி சரியான பாதையில் தான் பயணித்து கொண்டிருக்கின்றது எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வருகின்ற டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பல்வேறு விருதுகளை வென்ற இங்கிலாந்து... ஸ்டோக்ஸுக்கு மேலும் ஒரு மகுடம்!