ETV Bharat / sports

அறிமுக வீரர்களுக்கு வாழ்த்து கூறிய கிரிக்கெட் பிரபலங்கள்! - சச்சின் டெண்டுல்கர்

இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்து டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்களாக சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், வருண் சக்கரவர்த்தி, ராகுல் திவேத்தியா ஆகியோருக்கு வாய்பளிக்கப்பட்டுள்ளது.

tendulkar-congratulates-yadav-tewatia-kishan-on-india-call-up

author img

By

Published : Feb 21, 2021, 5:32 PM IST

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, பகலிரவு ஆட்டமாக அகமதாபாத்திலுள்ள மொடீரா கிரிக்கெட் மைதானத்தில், பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தநிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ நேற்று (பிப்.20) அறிவித்தது.

விராட் கோலி தலைமையிலான அணியில் அறிமுக வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ராகுல் திவேத்தியா, இஷான் கிஷான் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறிமுக வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது வாழ்த்துச் செய்திகளைத் தெரிவித்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இங்கிலாந்து அணிக்கெதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ராகுல் திவேத்தியா மற்றும் ஆஸ்திரேலிய தொடரை தவறவிட்ட வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியாவிற்காக விளையாடுவது ஒவ்வொரு வீரருக்கும் மிகப்பெரும் மரியாதை. நீங்கள் அனைவரும் நிறைய வெற்றிகளைப் பெறுவதற்கு எனது வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.

இர்பான் பதான் தனது ட்விட்டரில், "இறுதியாக உங்களது காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது சூர்யகுமார் யாதவ். அதேபோல் இஷான் கிஷான், ராகுல் திவேத்தியா, வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங் தனது பதிவில், "ஒருவழியாக சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு தேர்வாகிவிட்டார். மேலும் இஷான் கிஷானை இந்திய அணியில் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர் ஆர்.பி.சிங் தனது பதிவில், "இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ராகுல் திவேத்தியா ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். உங்களது எதிர்காலம் சிறந்ததாக அமைய வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கேன்’ - வைரலாகும் ராபின் உத்தப்பாவின் காணொலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.