பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது ஒரு நாள் போட்டிகள் முடிவடைய உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி இலங்கையுடனான டி20 அணியை அறிவித்துள்ளது.
இதில் எதிர்பார்க்காத விதமாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த உமர் அக்மல், அகமது ஷேசாத் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதில் உமர் அக்மல் கடைசியாக 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அப்போதைய பயிற்சியாளர் மிக்கி ஆர்தருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டார். தற்போது மூன்று ஆண்டுகள் கழித்து அணியில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அகமது ஷேசாத் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கி 16 மாதங்கள் தடைக்குப் பிறகு தற்போது அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கடைசியாக பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் டி20 அணி:
சர்பராஸ் அகமது (கேப்டன்), பாபர் அசாம், அகமது ஷெசாத், ஆசிப் அலி, பஹீம் அஷ்ரப், ஃபக்கர் ஜமான், ஹரிஸ் சோஹைல், இப்திகார் அகமது, இமாத் வாசிம், முகமது அமீர், முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், சதாப் கான், உமர் அக்மல், உஸ்மான் ஷின்வாரி, வஹாப் ரியாஸ்.
இதையும் படிங்க: காவல் துறையிடம் விளக்கமளித்த நெய்மர்