இந்திய கிரிக்கெட் வீரர் தோனி உலகக்கோப்பை தொடர் முடிவடைந்தவுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இது குறித்து மவுனத்தை மட்டுமே பதிலாகக் கூறி வந்தார். இதைத்தொடர்ந்து, இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது.
இதில், தான் பங்கேற்கவில்லை என்றும், நாட்டின் பாதுகாப்பு பணியில் இரண்டு மாதங்கள் ஈடுபட இருப்பதாகவும் பிசிசிஐக்கு தோனி கடிதம் எழுதினார்.
பின்னர், அதற்கான பயிற்சியை மேற்கொள்வதற்கான அனுமதியை தோனிக்கு இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் வழங்கினார். அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ராணுவத்தின் துணைப்பிரிவான பாராச்சூட் ரெஜிமெண்ட் பிரிவில் அவர் இணைந்தார். மேலும் ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு ஜம்மு காஷ்மீர் பகுதியில் ராணுவத்தில் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தோனியின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. தற்போது, கடல் தாண்டி வெஸ்ட் இண்டீஸில் இருந்தும் தோனிக்கு சல்யூட் பறக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஷெல்டான் காட்ரல் தோனி குறித்து உருக்கமாக ட்வீட் செய்துள்ளார். அதில், "கிரிக்கெட்டில் மட்டுமல்ல, தேசப்பற்றிலும் அவர் உத்வேதகத்தைத் தருகிறார்" என பதிவிட்டிருந்தார்.
-
This man is an inspiration on the cricket field. But he is also a patriot and a man that gives to his country beyond duty. I have been at home in Jamaica with my boys these past weeks and had time to reflect (1/2)
— Sheldon Cotterell (@SaluteCotterell) July 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This man is an inspiration on the cricket field. But he is also a patriot and a man that gives to his country beyond duty. I have been at home in Jamaica with my boys these past weeks and had time to reflect (1/2)
— Sheldon Cotterell (@SaluteCotterell) July 28, 2019This man is an inspiration on the cricket field. But he is also a patriot and a man that gives to his country beyond duty. I have been at home in Jamaica with my boys these past weeks and had time to reflect (1/2)
— Sheldon Cotterell (@SaluteCotterell) July 28, 2019
இதைத்தொடர்ந்து, தோனி கடந்த ஆண்டு பத்மபூஷன் விருதை ராணுவ உடையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து பெறும் வீடியோவையும் ஷேர் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த விருது பெறும் போது தோனிக்கும், சாக்ஷிக்கும் இருக்கும் காதலை அவர் சுட்டிக் காட்டினார்.
உலகக்கோப்பை தொடரின் போது, ஷெல்டன் காட்ரல் விக்கெட் எடுத்ததை சல்யூட் செய்து கொண்டாடினார். அவர் ஜமைக்கா பாதுகாப்பு படை வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.