ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் அடுத்த சீசனுக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஐபிஎல் அணிகள் தங்கள் அணியிலிருந்து பல வீரர்களை விடுவித்தனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் தங்கள் அணியிலிருந்து சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, மோஹித் சர்மா, சைத்தன்யா பிஷ்னோய், துருவ் ஷோரே உள்ளிட்ட ஐந்து வீரர்களை விடுவித்தனர்.
அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒவ்வொரு வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து சென்னை அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவும் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ், சென்னை அணியுடனான பயணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் அவர், சென்னை அணியில் இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் கடந்த இரண்டு வருடங்கள் அற்புதமானதாக இருந்தது. ஒரு முறை சாம்பியன் பட்டமும் மற்றொரு முறை இரண்டாவது இடமும் பிடித்தோம். நான் பல விஷயங்களை சிஎஸ்கேவில் கற்றுக்கொண்டதோடு அதை விரும்பவும் செய்தேன்.
என் மனதில் சென்னை அணிக்கு தனி இடம் உள்ளது. எனக்கு வாய்ப்பு வழங்கிய சென்னை அணிக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். சேப்பாக்கம் மைதானத்தில் நான் களமிறங்கிய முதல் போட்டி எப்போதும் என் நினைவில் விருப்பமானதாக இருக்கும் என பதிவிட்டிருந்தார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
2018ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட சாம் பில்லிங்ஸ், கடந்த இரண்டு சீசன்களில் இதுவரை 11 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளர். அதில் அவர் 2018இல் சேப்பாக்கத்தில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 56 ரன்களை குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.