ETV Bharat / sports

ஒரே போட்டியில் ரோஹித் இவ்வளவு சாதனைகளா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்! - முதலாவது டெஸ்ட்

விசாகப்பட்டினம்: இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா பல சாதனைகளை படைத்துள்ளார்.

Rohit Sharma
author img

By

Published : Oct 6, 2019, 12:09 AM IST

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவருகிறது. இந்திய அணி சார்பில் தொடக்க வீரராகக் களமிறங்கிய முதல் டெஸ்டிலேயே பல உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் ரோஹித் ஷர்மா.

Rohit Sharma
ரோஹித் ஷர்மா

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்தவொரு பேட்ஸ்மேனும் 12 சிக்சர்களுக்கு அதிகமாக அடித்ததில்லை. அந்த வரிசையில் பாகிஸ்தான் அணியின் வாசிம் அக்ரம்தான் ஒரு டெஸ்டில் 12 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார். தற்போது ரோஹித் ஷர்மா 13 சிக்சர்களை அடித்து அக்ரமின் சாதனையை முறியடித்துள்ளார்.

Rohit Sharma
பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோஹித்

ஒரு டெஸ்டின் இரு இன்னிங்ஸிலும் சதமடித்த இந்திய வீரர்கள்:

  • விஜய் ஹசாரே
  • சுனில் கவாஸ்கர் (மூன்று முறை)
  • ராகுல் டிராவிட் (இரண்டு முறை)
  • விராட் கோலி
  • ரஹானே
  • ரோஹித் சர்மா

ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர்கள் அடித்த ஒரே இந்தியர்:

  • டெஸ்ட் கிரிக்கெட் - 13 சிக்சர்
  • ஒருநாள் கிரிக்கெட் - 16 சிக்சர்
  • டி20 கிரிக்கெட் - 10 சிக்சர்

ரோஹித் மேலும் செய்த சாதனைகள்:

  • இந்த டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் சிக்சர்கள் விளாசியதன் மூலம் சர்வதேச டெஸ்டில் ஹாட்ரிக் சிக்சர் அடித்த 10ஆவது வீரர் என்ற சாதனையையும் ரோஹித் ஷர்மா படைத்தார்.
    Rohit Sharma
    சதமடித்த மகிழ்ச்சியில் ரோஹித் ஷர்மா
  • இதற்கு முன்பு 137 முதல் தர டெஸ்ட் இன்னிங்ஸில் ஆடியுள்ள ரோஹித் ஷர்மா ஒருமுறை கூட ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்ததில்லை. ஆனால், இந்த டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்துள்ளார். இதுபோல டெஸ்ட் போட்டியில் இருமுறையும் ஸ்டம்பிங்கில் ஆட்டமிழந்த முதல் இந்திய வீரரும் இவர்தான்.
  • தொடக்க வீரராகக் களமிறங்கிய முதல் டெஸ்டிலேயே இரு சதங்கள் அடித்த முதல் வீரரும் ரோஹித் ஷர்மாதான்.
  • இந்தியாவில் தொடர்ச்சியாக 7 இன்னிங்ஸில் 50+ ஸ்கோர்களை எடுத்த முதல் வீரரும் அவரே.

இதையும் படிங்க: #IndvsSA அஸ்வின் சுழலில் சுருண்ட தெ.ஆப்பிரிக்கா! - 2ஆவது இன்னிங்ஸில் இந்தியா நிதானம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.