ETV Bharat / sports

போட்டிக்கு நடுவில் பாடல் பாடிய தவான்: ரோஹித் ஷர்மா ஷேரிங்ஸ் - Rohit Sharma

2015ஆம் ஆண்டு நடந்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின்போது ஷிகர் தவான் சத்தமாக பாடல் பாடிய சம்பவம் பற்றி ரோஹித் ஷர்மா பேசியுள்ளார்.

Rohit shares funny story about Dhawan singing during a match

author img

By

Published : Jun 5, 2020, 9:13 PM IST

இந்திய அணிக்கக 2013ஆம் ஆண்டிலிருந்து ஷிகர் தவான் - ரோஹித் ஷர்மா இணை தொடக்கம் கொடுத்து வருகின்றனர். இந்த இணை களத்தில் எந்த அளவிற்கு சிறப்பாக ஆடுகிறதோ, அதே அளவிற்கு வெளியிலும் நண்பர்களாக உள்ளனர்.

இந்நிலையில் போட்டியின் நடுவே ஷிகர் தவான் பாடல் பாடி அனைவரையும் சிரிக்க வைத்த சம்பவம் பற்றி ரோஹித் ஷர்மா பேசியுள்ளார். ஐசிசி சார்பாக மயங்க் அகர்வாலுடன், ரோஹித் ஷர்மா நேரலையில் பேசினார்.

அந்த வீடியோவில், ''2015ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நான் ஸ்லிப்பில் ஃபீல்டு செய்துகொண்டிருந்தேன். ஷிகர் தவான் மூன்றாம் ஸ்லிப் ஃபீல்டு நிலையில் நின்றிருந்தார். திடீரென ஷிகர் சத்தமாக பாடல் பாடத் தொடங்கினார்.

அந்த நேரம் பார்த்து பந்துவீச்சாளர் பந்தை வீச வேகமாக ஓடி வந்தார். பேட்டிங் செய்துகொண்டிருந்த தமீம் இக்பாலுக்கு எங்கிருந்து சத்தம் வருகிறது என புரியாமல் குழம்பி, பந்தையும் அடிக்கவில்லை. அந்த நேரத்தில் அனைவரும் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்தோம்'' என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.