ETV Bharat / sports

ஒருங்கிணைந்த மும்பை & சென்னை அணியின் கேப்டனாக ஜாம்பவானை நியமித்த ரோஹித், ரெய்னா!

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா இருவரும் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் & மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களை ஒருங்கிணைத்து உருவாக்கிய அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியை நியமித்துள்ளனர்.

Rohit & Raina pick combined MI-CSK side, Dhoni to lead team

author img

By

Published : May 15, 2020, 3:51 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடர், ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்பின், இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்த வண்ணம் இருந்ததால், நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தது. பின்னர் கிரிக்கெட் வீரர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, அவ்வப்போது சமூக வலைதள நேர்காணல் நிகழ்ச்சிகளில் ரசிகர்களை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் எந்த அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தை தூண்டுவதைப்போன்று சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களிடையேயும் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியது. காரணம், ஐபிஎல் வரலாற்றில் இவ்விரு அணிகளும் தங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே எப்போதும் வழிநடத்தி வருகிறது.

தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக, தனிமைப்படுத்துதலை மேற்கொண்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னாவும் இன்ஸ்டாகிராம் நேரலை நேர்காணலின் போது சிஎஸ்கே & எம்ஐ அணி வீரர்களைக் கொண்டு ஒருங்கிணைந்த அணியை அறிவித்துள்ளனர். இதில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இவர்களது அணியின் கேப்டனாக உலகின் தலைசிறந்த கேப்டன் என அறியப்படும் மகேந்திர சிங் தோனியை நியமித்துள்ளனர்.

மேலும் இவர்களது அணியில் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர்களான சச்சின் டெண்டுல்கர், மேத்யூ ஹெய்டன், டூ பிளேசிஸ், பொல்லார்ட், பிராவோ என பல நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர்.

  • ஒருகிணைந்த சிஎஸ்கே & எம்ஐ அணி : எம்.எஸ். தோனி(கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், அம்பத்தி ராயுடு, மேத்யூ ஹெய்டன், பாப் டூ பிளேசிஸ், ஹர்திக் பாண்டியா, கிரேன் பொல்லார்ட், டுவைன் பிராவோ, ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ரோஹித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் அணியை தேர்ந்தெடுக்கும் காணொலியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இக்காணொலியைக் கண்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குடும்பத்தினருடன் லூட்டி அடிக்கும் டேவிட் வார்னர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.