இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி, கான்பெர்ரா கிரிக்கெட் மைதானத்தில் நாளை (டிச.01) நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆஸி., அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் ஃபார்ம் குறித்து கவலைக்கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஃபின்ச், "இந்திய அணியுடனான தொடரில் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கடந்த எட்டு அல்லது ஒன்பது வருடங்களில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரது பங்களிப்பை நாம் அவ்வளவு எளித்தில் மறந்துவிட முடியாது. அதனால் அவரது ஃபார்ம் குறித்து கவலைக்கொள்ளத் தேவையில்லை.
அவர் இன்னிங்ஸின் தொடக்க ஓவர்களை வீசுவதற்கு விரும்புகிறார். ஆனால் நாங்கள் இமாலய இலக்குகளை நிர்ணயித்துள்ளதால் இந்தியா போன்ற அணி வீரர்கள் தொடக்கம் முதலே அடித்து ஆட விரும்புகின்றனர். அதன் காரணமாகவே ஸ்டார்கின் ஓவர்களில் ரன்கள் அதிகாமாக தரப்பட்டிருந்தது.
அதனால் நாளையப் போட்டியின்போது அணியில் ஒரு சில மாற்றங்களை கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஆனால் ஸ்டார்க் குறித்து யாரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை. அவர் எங்கள் அணியின் சிறந்த பந்துவீச்சாளர் என்பது நாங்கள் அறிந்த ஒன்றே.
மேலும் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ள டேவிட் வார்னரின் இடத்தில் யாரைக் களமிறக்குவது என நாங்கள் யோசித்து வருகிறோம். ஏனெனில் எங்களது அணியில் மேத்யூ வேட் தொடக்க வீரராக வெளியே உள்ளார். அதேசமயம் லபுசாக்னேவும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் யாரை தொடக்க வீரராக களமிறக்குவது என்ற சந்தேகம் உள்ளது.
-
JUST IN: The latest on David Warner's injury and another change to Australia's white-ball squad.@samuelfez | #AUSvIND https://t.co/CjsHskyvC4 pic.twitter.com/Hh9yCotAKu
— cricket.com.au (@cricketcomau) November 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">JUST IN: The latest on David Warner's injury and another change to Australia's white-ball squad.@samuelfez | #AUSvIND https://t.co/CjsHskyvC4 pic.twitter.com/Hh9yCotAKu
— cricket.com.au (@cricketcomau) November 30, 2020JUST IN: The latest on David Warner's injury and another change to Australia's white-ball squad.@samuelfez | #AUSvIND https://t.co/CjsHskyvC4 pic.twitter.com/Hh9yCotAKu
— cricket.com.au (@cricketcomau) November 30, 2020
ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவரைப் போன்ற வீரர் அணியில் இடம்பெறாமல் இருந்தால், அது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இருப்பினும் எங்களது அணியில் அவரைப் போன்ற பேட்டிங் யுக்திகளைக் கொண்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். அதனால் எங்களால் டெஸ்ட் போட்டிகளில் வார்னர் இல்லாமல் விளையாட முடியும் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:AUS VS IND: பணிச்சுமை குறித்து மனம் திறந்த ஸ்ரேயாஸ்!