ETV Bharat / sports

பட்டய கௌப்புன வெய்யிலால ஆட்டத்த ரத்துபன்ன ஆஸ்திரேலியா..!

author img

By

Published : Dec 20, 2019, 5:13 PM IST

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டுநாள் பயிற்சி ஆட்டத்தில், வெயிலின் வெப்பம் காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

Newzealand 1st day cancelled due to extreme weather

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கெனவே இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது மெல்போர்னில் வருகிற 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று நியூசிலாந்து அணி , விக்டோரியா லெவன் அணியுடனான இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடுவதாக இருந்தது.

ஆனால் மெல்போர்னில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விளையாட இரு அணி வீரர்களும் மறுப்பு தெரிவித்தனர். மேலும் ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம், மெல்போர்னில் 43 டிகிரி செல்சியல் வெப்பம் நிலவுவதாக அறிவித்ததையடுத்து இந்த முடிவினை நியூசிலாந்து அணி எடுத்துள்ளதாக தெரிவித்தது.

இதுகுறித்து நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறுகையில், இங்கு நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பதை நாங்கள் தவிர்த்துள்ளோம். அதேபோல் வருகிற ஞாயிற்றுகிழமை, 25 டிகிரி வெப்பநிலையாக இருந்தால் அந்த போட்டியில் நாங்கள் பங்கேற்கின்றோம். ஏனெனில் இந்த வெப்பநிலையில் விளையாடுவது வீரர்களுக்கு நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதினால் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆஸ்திரேலிய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது பெர்த் மைதானத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐபிஎல் ஏலத்தில் கவனம் ஈர்த்த தமிழ்நாட்டு வீரர்கள்!

Intro:Body:

Newzealand 1st day cancelled due to extreme weather 

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.