ETV Bharat / sports

நியூசிலாந்து கிரிக்கெட்டருக்கான விருது வென்ற ராஸ் டெய்லர்...!

இந்தாண்டின் சிறந்த நியூசிலாந்து கிரிக்கெட்டருக்கான விருதினை ராஸ் டெய்லர் வென்றுள்ளார்.

new-zealand-cricketer-of-the-year-award
new-zealand-cricketer-of-the-year-award
author img

By

Published : May 1, 2020, 11:59 AM IST

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு நியூசிலாந்து அணி வீரர்கள் மீது எப்போதும் ஒரு மரியாதை இருக்கும். அதற்கேற்றவாறு கிவிகளிடமிருந்து வரும் வீரர்களும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவர். நியூசிலாந்து அணி வீரர்களான பிளம்மிங், மெக்கல்லம், வில்லியம்சன் ஆகியோருக்கு இடையில் சைலண்ட்டாக ஜாம்பவான் வீரராக வளர்ந்த வீரர் ராஸ் டெய்லர்.

சமீபத்தில் டி20, டெஸ்ட், ஒருநாள் என கிரிக்கெட்டின் அனைத்துவிதமான ஃபார்மட்டிலும் 100 போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற பெருமையை ராஸ் டெய்லர் பெற்றுள்ளார். 14 வருடங்களாக தொடர்ந்து நியூசிலாந்து அணிக்காகச் சிறப்பாகப் பங்காற்றிவரும் ராஸ் டெய்லருக்கு, இந்த ஆண்டுக்கான சிறந்த நியூசிலாந்து கிரிக்கெட்டர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது பற்றி அவர் பேசுகையில், ''இந்த 14 வருடங்கள் நிறைய ஏற்ற, இறக்கங்களுடன்தான் பயணித்துள்ளேன். உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்வி, பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் கிடைத்த ஆதரவு என இந்த வருடம் மறக்க முடியாத பல அனுபவங்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு முறையும் நான் களமிறங்கும்போது ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற தீவிரம்தான் என்னை சிறப்பாகச் செயல்படவைக்கிறது. அந்தத் தீவிரம் இருந்தால், வயது என்பது வெறும் எண்தான்'' என்றார்.

நியூசிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் ரிச்சர்ட் ஹார்ட்லி, டெய்லர் குறித்துப் பேசுகையில், ''தேர்வுக்குழு உறுப்பினராக 2006ஆம் ஆண்டு பணியாற்றியதிலிருந்து டெய்லரைத் தொடர்ந்து பார்த்துவருகிறேன். கடந்த 14 வருடங்களில் டெய்லரின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட்டிற்காகப் பல சாதனைகள் படைத்ததற்கு வாழ்த்துகள்.

நியூசிலாந்து கிரிக்கெட்டுக்காக மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டிக்காக நீங்கள் செய்த பங்களிப்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்'' என்றார்.

தொடர்ந்து நியூசிலாந்து அணியின் சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளருக்கான விருதை டிம் சவுதி வென்றார். சிறந்த ஒருநாள் போட்டிகளுக்கான விருதை நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் வென்றார்.

மகளிருக்கான சிறந்த ஒருநாள் போட்டி வீராங்கனைக்கான விருதை சுசி பேட்சும், டி20 போட்டிகளுக்கான சிறந்த வீராங்கனை விருதை சோஃபி டெவினும் கைப்பற்றியுள்ளனர்.

இதையும் படிங்க: சி.எஸ்.கே.வைப் போன்று எந்த அணியும் கிடையாது - டுவைன் பிராவோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.