ஐபிஎல் டி20 தொடரின் 13ஆவது சீசன் வரும் மார்ச் 29ஆம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளது. இதன் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்தத் தொடருக்காகப் பெரும்பாலான இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க ஒரே காரணம் தோனிதான்.
இங்கிலாந்தில் கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் எந்தவிதமான போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்த அவர், தற்போது ஐபிஎல் தொடரில் ரீ-என்ட்ரி தரவுள்ளார். இதனால், அவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அதீத ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
இந்தத் தொடரின் பயிற்சிக்காக சென்னை வீரர்களான அம்பதி ராயுடு, கரண் சர்மா, பியூஸ் சாவ்லா ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.
-
Every goose shall bump with First Day First Show feels! Just #StartTheWhistles! #HomeSweetDen 🦁💛 pic.twitter.com/DpQBIqahZe
— Chennai Super Kings (@ChennaiIPL) March 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Every goose shall bump with First Day First Show feels! Just #StartTheWhistles! #HomeSweetDen 🦁💛 pic.twitter.com/DpQBIqahZe
— Chennai Super Kings (@ChennaiIPL) March 1, 2020Every goose shall bump with First Day First Show feels! Just #StartTheWhistles! #HomeSweetDen 🦁💛 pic.twitter.com/DpQBIqahZe
— Chennai Super Kings (@ChennaiIPL) March 1, 2020
அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, தோனி இன்று மாலை முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுவார் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எட்டு ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்தியா!