ETV Bharat / sports

தோனி ஓய்வு முடிவு - ரசிகர்கள் ஷாக் - MS Dhoni extends break

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர் தோனி தனது ஓய்வு காலத்தை மேலும் நீட்டித்துள்ளதாக தகவல் வெளியுள்ளது.

dhoni
author img

By

Published : Sep 22, 2019, 10:17 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியை, கடந்த சில நாட்களாக இந்திய அணியில் பார்க்க முடியாததால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். மேலும் உலகக்கோப்பை தொடருக்குப்பின் அவரது ஓய்வு முடிவுகள் குறித்து வெளிவரும் செய்திகளும் அவ்வபோது ரசிகர்களின் ஹார்ட்-பீட்டை எகிறச் செய்து திணறடித்துவருகிறது. தோனி இறுதியாக உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கினார்.

அதைத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் அணியில் இருந்து ஓய்வு பெற விரும்பிய அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்கப்போவதில்லை என்று கூறினார். பின்னர் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்ட் பிரிவில் பயிற்சி பெற்றார். அந்த பயிற்சி முடிந்த பின் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த தொடருக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்படவில்லை. மாறாக இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இளம் வீரர் ரிஷப் பந்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கிடையே இரண்டாவது டி20 போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் கோலி, தோனியின் படத்தோடு பதிவிட்ட ட்விட் மிகப்பெரிய வைரலானது. இதனால் தோனி ஓய்வை அறிவிக்க போகிறார் என பல ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டன. ஆனால் அதுவும் பொய்த்து போனது.

dhoni
தோனி

தென் ஆப்பிரிக்க தொடருக்குப்பின் இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான உள்நாட்டு தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் தோனியை பார்த்துவிடலாம் எண்ணிக்கொண்டிருக்கும் அவரின் ரசிகர்களுக்கு தற்போது ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் தோனி தனது ஓய்வு காலத்தை மேலும் இரண்டு மாதங்கள், அதாவது நவம்பர் மாதம் வரை நீட்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தோனி டிசம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள டி20, ஒருநாள் போட்டிகளில்தான் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி தோனியின் ரசிகர்களை பெரும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. மேலும் ஒருசில கிரிக்கெட் விமர்சகர்கள் தோனி எந்நேரத்திலும் ஓய்வை அறிவித்துவிட்டு சென்றுவிடுவார் என்கின்றனர்.

bcci
பிசிசிஐ

ஆஸ்திரேலியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு இளம் வீரர் ரிஷப்பை தயார் செய்வதற்காக பிசிசிஐ நிர்வாகம் தோனியை புறக்கணித்துவருகிறது. எனினும் இந்நாள் வரையில் இந்திய அணியில் ஃபினிஷ் செய்வதற்கு ஒரு வீரர் இருக்கிறாரா என்ற கேள்விக்கு யாராலும் விடையளிக்க முடியவில்லை.

dhoni
தோனி - கோலி

தோனி ஒரு விக்கெட் கீப்பராகவும், இக்கட்டான சூழ்நிலைகளில் ஒப்பற்ற பேட்ஸ்மேனாகவும் செயல்படும் வல்லமை படைத்தவர். இது தவிர அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த வீரராகவும், முன்னாள் கேப்டனாகவும் தோனி, தற்போதைய கேப்டன் கோலிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். எனவே அவரது இடத்திற்கு உகந்த வீரரை தயார் செய்யும் வரை தோனிஇந்திய அணிக்கு தேவை என்பதே நிதர்சனமான உண்மை. இதை பிசிசிஐ புரிந்துகொண்டால் நாம் இன்னும் சில ஆண்டுகள் தோனி என்னும் அமைதி புயலை ஊதா உடையில் காணலாம்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.