இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ். 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக ஆடிய சிராஜ், ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் தேர்வுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில் நுரையீரல் பிரச்னை காரணமாக சிராஜின் தந்தை முகமது கோஸ் நேற்று (நவ.20) உயிரிழந்தார். இதையடுத்து இந்திய அணியினர் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சிராஜ், கரோனா கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசிய சிராஜ், “எனது வாழ்க்கையின் மிகப்பெரிய ஆதரவை நான் இழந்துவிட்டேன். நான் நாட்டிற்காக விளையாடுவதைப் பார்ப்பது அவருடைய கனவாக இருந்தது, அதை அவருக்கு கொடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:காணொலி கூட்டரங்கின் மூலம் நடைபெறும் ஃபிஃபா விருது நிகழ்ச்சி!