ETV Bharat / sports

#Ashes: 'சென்னை-28' சிவா ஸ்டைலில் அவுட்டான இங்கிலாந்து வீரர் - Moen Ali out

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் மொயின் அலி 'மிர்ச்சி' சிவா போன்று ஆட்டமிழந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

#Ashes: அகில சூப்பர்ஸ்டார் சிவா ஸ்டைலில் அவுட் ஆன இங்கிலாந்து வீரர்
author img

By

Published : Aug 4, 2019, 1:14 PM IST

கிரிக்கெட்டில் ஒரு சில வீரர்கள் போல்ட் ஆவதை பார்த்தால் ரசிகர்களுக்கும் அடக்கமுடியாத அளவுக்கு சிரிப்புவரும். குறிப்பாக, ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூவ் ஸ்ட்ராஸ், பலமுறை ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பரபரப்பான ஆட்டத்தை நகைச்சுவையாக மாற்றியுள்ளார்.

அதேபோன்ற நிகழ்வொன்று இந்த ஆண்டுக்கான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நடைபெற்றுள்ளது. இம்முறை ஆண்ட்ரூவ் ஸ்ட்ராஸுக்கு பதிலாக மொயின் அலியும் ஷேன் வார்னேவிற்கு பதிலாக நாதன் லயானும் அந்த நகைச்சுவையான சம்பவத்தில் இடம்பிடித்துள்ளனர்.

Ashes
ஸ்ட்ராஸ் அவுட்

இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் நாதன் லயான் வீசிய 105ஆவது ஓவரின் முதல் பந்தில் ரோரி பர்ன்ஸ் 133 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த மொயின் அலி அந்த ஓவரில் நான்கு பந்துகளுக்கு மட்டுமே தாக்குப்பிடித்தார்.

பின்னர் லயான் வீசிய ஐந்தாவது பந்தை டிஃபெண்ட் செய்யாமல் மொயின் அலி விக்கெட் கீப்பருக்கு செல்லும் என விட்டுவிட்டார். ஆனால், பந்து நன்கு சுழன்று ஆஃப் ஸ்டெம்பை பதம் பார்த்தது. இதனால், மொயின் அலி ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு நடையைக்-கட்டினார்.

இவர் போல்ட் முறையில் அவுட் ஆன ஸ்டைலை பார்த்தால் சென்னை-28 திரைப்படத்தின் முதல் பாகத்தில் சிறுவர்களுக்கு எதிரான போட்டியில் 'மிர்ச்சி' சிவா போல்ட் ஆகும் காட்சிதான் நினைவுக்குவருகிறது. இப்படி கோமாளித்தனமாக மொயின் அலி போல்ட் ஆகும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.