இது குறித்து அவர் கூறுகையில், மேக்ஸ்வெல் பேட்டிங் பயிற்சியில் அதிக கவனம் செலுத்திவருகிறார். இதன் பலனாக, அவர் சமீபகாலமாக நல்ல ஆட்டத்தை வெளிபடுத்திவருகிறார். ஆஸ்திரேலிய அணிக்கு அவர் மிகவும் முக்கியமான வீரர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என அவர் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடியவர். இதனால் அவர் அணிக்கு தேவையான உத்வேகத்தையும் தருகிறார்.
டி20 கிரிக்கெட் போட்டிகளில் அவர் எப்படிப்பட்ட பேட்ஸ்மேன் என்பது இந்தியாவுக்கு எதிராக சதம் விளாசியதன் மூலம் நிரூபணமானது.
தற்போது அவருக்கு இருக்கும் சவால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்குவதுதான். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 60 ஆக உள்ளது. இதனால், அவர் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். மேக்ஸ்வெல்லிடம் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன் ஆகும் திறமை உள்ளது.
99 போட்டிகளில் விளையாடி பேட்டிங் சராசரியை அவர் 33 ஆக வைத்துள்ளார். பேட்டிங்கில் அவர் இன்னும் கவனம் செலுத்தினால் கூடிய விரைவில் அவரும் விராட் கோலியை போல் ஜொலிப்பார் என தெரிவித்தார்.