ETV Bharat / sports

சர்வதேச அரங்கில் சாதனை படைத்த மந்தானா !

author img

By

Published : Mar 10, 2021, 4:52 PM IST

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இலக்கை துரத்தும் போது தொடர்ச்சியாக 10 அரைசதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா படைத்துள்ளார்.

Mandhana becomes first batter to hit 50-plus scores in 10 successive ODI chases

இந்தியா, தென்ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தானா, 64 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரிகளை விளாசி 80 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

நேற்று அவர் அடித்த அரைசதத்தின் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இலக்கை துரத்தும்போது தொடர்ச்சியாக 10 அரைசதங்களை விளாசிய முதல் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஆடவர், மகளிர் என இரு பிரிவு கிரிக்கெட்டிலும் இலக்கை துரத்தும்போது தொடர்ச்சியாக 10 அரை சதங்களை விளாசியவர் என்ற பெருமையையும் மந்தனா தற்போது பெற்றுள்ளார்.

முன்னதாக, நியூசிலாந்து மகளிர் அணியின் கேப்டன் சுசி பேட்ஸ் தொடர்ச்சியாக 9 அரை சதங்களை விளாசியதே சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இங்கி. டி20 தொடர்: 'யார்க்கர் நாயகன்' நடராஜன், வருண் பங்கேற்பதில் சிக்கல்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.