கரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொதுமுடக்கம் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பொதுமுடக்கம் அமலில் இருந்த காலகட்டமான மார்ச் 12 முதல் மே 14ஆம் தேதிவரையிலான காலத்தில் இந்தியாவிலிருந்து கோலி மட்டுமே அதிகம் பேரால் கவனிக்கப்பட்ட விளையாட்டு வீரராக இருந்துள்ளார்.
இந்த பொதுமுடக்க காலத்தில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 294 பவுண்டுகள் ஸ்பான்ஸர் பதிவுகளால் சம்பாதித்துள்ளார். மேற்கூறிய நாட்களில் வெறும் மூன்று பதிவுகள் மட்டுமே தனியாக பதிவிட்டிருந்த நிலையில் அதன்மூலம் 1 லட்சத்து 26 ஆயிரத்து 431 பவுண்டுகள் தலா ஒவ்வொரு பதிவுக்கும் பெற்றுள்ளார்.
போர்ச்சுல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 1.8 மில்லியன் பவுண்டுகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
இதைத்தொடர்ந்து ஸ்பெயின் மற்றும் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணி வீரர் மெஸ்ஸி இரண்டாவது இடத்திலும், பிரேசில் நாட்டு கால்பந்து வீரர் நெய்மார் முறையே இரண்டு, மூன்றாவது இடத்தில் உள்ளனர்.