ETV Bharat / sports

எனக்கு பெட்டர்மாக்ஸ் லைட்டுதான் வேணும் - அடம்பிடிக்கும் கோலி

ரவி சாஸ்திரேயே மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக நீட்டிக்கப்பட்டால் தனக்கு மகிழ்ச்சி அளிக்கும் என இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதற்கு ரசிகர்கள் இணையதளத்தில் கலாய்த்து வருகின்றனர்.

எனக்கு பேட்டர்மாக்ஸ் லைட்டுதான் வேணும் அடம்பிடிக்கும் கோலி
author img

By

Published : Jul 31, 2019, 4:14 AM IST

Updated : Jul 31, 2019, 12:04 PM IST

ரசிகர்களுக்கு பிடித்த கமெண்டெட்டராக இருந்த ரவி சாஸ்திரி, தற்போது அதிகம் வெறுக்கும் நபராக மாறியுள்ளார். கமெண்ட்ரியைவிட்டு அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறியதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பயிற்சியாளரான டன்கன் ஃபிளட்சர் பொறுப்பு வகித்தபோது, 2014ல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்மூலம், கமெண்ட்ரியில் இருந்த ரவி சாஸ்திரி அணியின் டைரக்கடர் வழிகாட்டியாக நியமிக்கப்பட்டார்.

இவரது வழிகாட்டின்கீழ் இந்திய அணி 2015 உலகக்கோப்பை, 2016 டி20 உலகக்கோப்பை இவ்விரண்டிலும் இந்திய அணி அரையிறுதிச் சுற்றுவரைதான் சென்றது. இதன் பின்னர், 2016 முதல் 2017 ஜூன் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவிற்கும் கோலிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது.

இதனால், அவருக்கு பதிலாக ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக 2017ல் பதவி ஏற்றார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றிபெற்று இருந்தாலும், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தது. அதற்கு ரவி சாஸ்திரிதான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.

Ravi Shastri
கோலி - ரவி சாஸ்திரி

இதைத்தொடர்ந்து, 2019 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதி சுற்றோடு ஊருக்கு பெட்டியை கிளப்பியது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு கோலி - ரவி சாஸ்திரி இருவரும் அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்ததுதான் என்ற பிரச்னை வெடித்தது.

பெரும்பாலும் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய போட்டிகளில் தோல்வி அடைவதற்கு முக்கிய காரணமே கோலி - ரவி சாஸ்திரி இருவரும் அணியில் தேவையில்லாமல் செய்யும் மாற்றங்கள்தான். கமெண்ட்ரியில் ரவி சாஸ்திரி தனது குரலில் காட்டிய கம்பீரம், பயிற்சியாளரில் மவுனமாகியது நிதர்சனம்.

Ravi Shastri
கோலி

கோலியிடம் இருந்து வேலை வாங்குவதற்கு பதிலாக அவருக்கு ஏற்றவாறு ரவி சாஸ்திரி உள்ளார். நான்காவது வரிசை என்ற ஒரு பிரச்னையுடன் உலகக்கோப்பைக்கு சென்ற இந்திய அணியில் தற்போது நான்காவது வரிசை, மிடில் ஆர்டர், ஓப்பனிங் பேட்ஸ்மேன், ஆறாவது பந்துவீச்சாளர் யார் போன்ற பல்வேறு பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாலு நாலு என்று சொல்லி சொல்லியே கோப்பையை கோட்டை விட்டுடிங்களே கோபால்... என ரசிகர்கள் நொந்துகொள்கின்றனர்.

இதனால், ரசிகர்கள் சிவாஜி படத்தில் வரும் வசனம் போல, பேசமாக நீங்க கமெண்ட்ரிக்கே போயிடங்க ரவி சாஸ்திரி (சிவாஜி) என தொடர்ந்து எதிர்ப்பலைகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரது பதவிக் காலம் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்புக்குமாறு பிசிசிஐ அறிவித்த காலக்கேடுவும் இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் பயிற்சியாளர் குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி கூறுகையில்,

Ravi Shastri
கோலி - சாஸ்திரி

"பயிற்சியாளரை தேர்வு செய்வது தொடர்பாக (சி.ஏ.சி) கிரிக்கெட் ஒழுங்குமுறைக் குழு என்னை அணுகவில்லை. ஒருவேளை எனது விருப்பம் கேட்டால் நான் எனது கருத்தினை முன்வைப்பேன். பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் அணியில் உள்ள வீரர்களும் நல்ல தொடர்பில்தான் இருக்கிறார்கள். இதனால், அவர் பயிற்சியாளராக நீடித்தால் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும். இருப்பினும் இது குறித்த முடிவை சி.ஏ.சிதான் எடுக்கும்" என்றார்.

இவரது கருத்தை கேட்டு, ரசிகர்கள் ஏன் கோலி உங்களுக்கு ரவி சாஸ்திரி (பெட்டர்மாக்ஸ் லைட்டு)தான் வேணுமா வேறு யாரும் வேண்டாமா என்று இணையதளத்தில் கலாய்த்து வருகின்றனர்.

முன்னதாக, பிசிசிஐயின் மூத்த அலுவலர் ஒருவர், ரவி சாஸ்திரி - கோலி இருவருக்கும் தங்களது பொறுப்பில் நீட்டிக்க வேண்டும். இவர்கள் 2020 டி20 உலகக்கோப்பை, 2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்காக இளம் வீரர்களை தயார் செய்ய வேண்டும். வெற்றிகரமாக இருக்கும் இந்த கூட்டணியை மாற்றினாலும் அது நன்றாக இருக்காது என அவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார்.

இதனிடையே, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங் விண்ணப்பித்துள்ளார். ''2015, 2019 உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணி தோல்வி அடைந்தற்கு ரவி சாஸ்திரிதான் காரணம். அடுத்து 2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணியை தயார் செய்ய வேண்டுமென்றால் அணியின் பயிற்சியாளரை தற்போது மாற்றம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது'' என கடுமையாக விமர்சித்தார்.

Ravi Shastri
ரவி சாஸ்திரி

இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பையில் வெற்றிபெறும் போது ராபின் சிங் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஈடுபட்டிருந்தார் என்பதை நினைவுக் கூற வேண்டியது மிகவும் அவசியம். ரவி சாஸ்திரி தொடர்ந்து பயிற்சியாளர் பதவியில் நீடிப்பாரா அல்லது புதிய பயிற்சியாளரை சி.ஏ.சி தேர்வு செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒருவேளை ரவி சாஸ்திரியே மீண்டும் பயிற்சியாளராக நீட்டிக்கப்பட்டால் இந்திய அணிக்கு 'பிம்பிளிக்காக பில்லாப்பி'தான். எது நடந்தாலும் காத்திருப்போம்.

Intro:Body:Conclusion:
Last Updated : Jul 31, 2019, 12:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.