ETV Bharat / sports

அமெரிக்க டி20 லீக் போட்டியில் களமிறங்கவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! - ஐபில், சிபிஎல் போட்டி

டெல்லி: ஐபில், சிபிஎல் போட்டிகளில் அதிரடி காட்டிவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அடுத்ததாக, அமெரிக்க டி20 லீக் போட்டிகளில் களமிறங்கவுள்ளது.

அமெரிக்கா
அமெரிக்கா
author img

By

Published : Dec 1, 2020, 1:30 PM IST

இந்தியன் பிரீமியர் லீக்கில் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கரீபியன் பிரீமியர் லீக்கில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் வைத்திருக்கும் நைட் ரைடர்ஸ் குழுமம், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மேஜர் லீக் கிரிக்கெட்டில் (எம்.எல்.சி) பல மில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளது. அமெரிக்க டி20 லீக் போட்டிகள் 2022இல் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறு அணிகள் பங்கேற்கவுள்ள எம்எல்சி போட்டியின் ஆலோசகராக தி நைட் ரைடர்ஸ் அணி செயல்படும். ஐபிஎல், சிபிஎல் பொறுத்தவரை அணியின் உரிமத்தை ஒரு நிறுவனம்தான் வைத்துள்ளது. ஆனால், எம்எல்சியில் பங்குபெறும் அனைத்து அணிகளும் முதலீடு செய்து அதில் பங்களிக்க வேண்டும். இதனால், அனைத்து அணிகளும் போட்டியின் பங்குதாரராக இருப்பார்கள்.

இது குறித்து பேசிய நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாக இயக்குநர் வெங்கி மைசூர், "அமெரிக்க டி20 போட்டி தொடர்பாக எங்களுக்கு அழைப்பு வந்தபோது, ஆழமாக யோசித்து முடிவு செய்துள்ளோம். எம்எல்சியில் ஒரு அணியாக பங்குபெறுவது மட்டுமின்றி அவர்கள் எங்களை ஆலோசகராகவும் கருதுகிறார்கள்.

அமெரிக்காவின் கிரிக்கெட் வளர்ச்சியில் நாங்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். அடுத்த சில ஆண்டுகளில், அங்குள்ள வசதிகளை மேம்படுத்தி, புதிதாக ஆறு பிரமாண்ட கிரிக்கெட் மைதானங்களை அமைத்திட திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.