உலகம் முழுவதும் இருந்து எதிர்பார்க்கப்படும் கிரிக்கெட் தொடராக ஐபிஎல் டி20 தொடர் மாறியுள்ளது. ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல் திருவிழாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடம் கரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பேசுகையில், “கரோனா வைரஸ் பாதிப்பு வருவதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஏனென்றால் இந்த வருடத்தின் முடிவில் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடக்கவுள்ளது. அதற்கு தயாராவதற்கு ஏதுவாக ஐபிஎல் களம் அமைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் கரோனா வைரசால் பாதிப்புகள் அதிகமாகியுள்ளன. கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து அனைவரும் வேகமாக வெளிவர வேண்டும்'' என்றார். ஐபிஎல் தொடரில் பெரும்பான்மையான ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காதலி வாங்கச் சொன்னது குறித்து மனம் திறந்த ஐபிஎல் ஜாக்பாட் வீரர்