INDvsRSA: இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது இரட்டை சதத்தை அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்களை எடுத்து டிக்ளெர் செய்தது.
அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஒன்பது ரன்களை மட்டுமே எடுத்தது.
அதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளசிஸ் ஷமி வீசிய முதல் ஓவரிலேயே ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ஜுபைர் ஹம்சா மற்றும் பவுமா இணை அணியினர் ரன் கணக்கை உயர்த்தத் தொடங்கினர்.
-
Zubayr Hamza brings up his maiden Test half-century off just 56 balls on day three of the Ranchi Test.
— ICC (@ICC) October 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
He reaches the landmark in style, with a six!
LIVE 👉 https://t.co/AEYe6hGC3o pic.twitter.com/A7IG2CuDvL
">Zubayr Hamza brings up his maiden Test half-century off just 56 balls on day three of the Ranchi Test.
— ICC (@ICC) October 21, 2019
He reaches the landmark in style, with a six!
LIVE 👉 https://t.co/AEYe6hGC3o pic.twitter.com/A7IG2CuDvLZubayr Hamza brings up his maiden Test half-century off just 56 balls on day three of the Ranchi Test.
— ICC (@ICC) October 21, 2019
He reaches the landmark in style, with a six!
LIVE 👉 https://t.co/AEYe6hGC3o pic.twitter.com/A7IG2CuDvL
சிறப்பாக விளையாடிய ஹம்சா 56 பந்துகளில் அரை சதமடித்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து 62 ரன்கள் அடித்திருந்த நிலையில், அவர் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து நிதானமாக விளையாடிய டெம்பா பவுமா 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நதீம் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
பின் களமிறங்கிய கிளாஸனும் 6 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை, 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் ஜார்ஜ் லிண்டே 10 ரன்களுடனும், டேன் பீட் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி சார்பில் ஜடேஜா, உமேஷ் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஷமி மற்றும் நதீம் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
இதையும் படிங்க: எந்த அணியிலும் இடம்பிடிக்காத கெய்ல், மலிங்க ஜோடி - கவலையில் ரசிகர்கள்!