நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றில் நியூசிலாந்து அணியுடன் தோல்வியடைந்தது. பின்னர் அணித்தேர்வு, வீரர்களின் பேட்டிங் வரிசை குறித்தான சர்ச்சை எழுந்தது. மேலும், அணியின் கேப்டன் கோலிக்கும், துணை கேப்டன் ரோஹித்துக்கும் பனிபோர் நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே விராட் கோலியை அன்ஃபாலோ செய்திருந்த ரோஹித் சர்மா, தற்போது கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவையும் அவர் அன்ஃபாலோ செய்திருக்கிறார். ரோஹித் சர்மாவின் இந்த செயல், கோலியுடனான மோதலை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பதாக பலர் கூறுகின்றனர்.