ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் ‘தி டெஸ்ட்’ (The Test) ஆவணப்படம் அண்மையில் அமேசான் பிரைமில் வெளியானது. இக்காணொலியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் இந்திய அணி வீரர்களைப் பற்றி தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஸ்டோனிஸ் கூறுகையில், "நான் இந்தியாவில் விளையாடுவதை விரும்புகிறேன். ஒப்பிட முடியாத ஆற்றல் படைத்த கலாசாரத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். அந்த உற்சாகத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டுமானால், அதற்கு நீங்கள் முதலில் இந்தியா செல்ல வேண்டும்.
இந்திய அணி உலகிலேயே மிகவும் திறமையான அணி. இந்திய வீரர்கள் என்னைவிட திறமையானவர்கள். ஏனெனில் அவர்கள் எந்தச் சூழலிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்தவர்கள்" எனக் குறிபிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிவரும் மார்கஸ் ஸ்டோனிஸ், கடந்த பிக் பேஷ் லீக் டி20 தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக களமிறங்கிய 705 ரன்களை அடித்ததன் மூலம், சீசனின் சிறந்த வீரருக்கான விருதைப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கிரிக்கெட் வீரர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்திய நியூசிலாந்து!