ETV Bharat / sports

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்வு! - ravi shastri

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வி சாஸ்தி
author img

By

Published : Aug 16, 2019, 6:47 PM IST

உலகக்கோப்பைத் தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதில், ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் டாம் மூடி, இந்திய முன்னாள் வீரர் ராபின் சிங் உள்ளிட்ட வீரர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதேபோல், ரவி சாஸ்திரி பயிற்சியாளராகத் தொடர விண்ணப்பித்திருந்தார்.

புதிய தலைமை பயிற்சியாளரைத் தேர்வு செய்ய இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கபில் தேவ், அன்ஷுமான் கேக்வாட், சாந்தா ரங்கசாமி உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

கபில் தேவ் தலைமையிலான குழு
கபில் தேவ் தலைமையிலான குழு

இந்நிலையில், தலைமைப் பயிற்சியாளரைச் தேர்வு செய்வதற்கான நேர்காணல் இன்று மும்மையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ரவி சாஸ்திரி, டாம் மூடி, மைக் ஹசன் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் ரவி சாஸ்திரியே மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்வு
மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்வு

இவரது பயிற்சிகாலம் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ரவி சாஸ்திரியை நீக்குமாறு இணையதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில், ரவி சாஸ்திரியே பயிற்சியாளராகத் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

indian cricket coach

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.