ETV Bharat / sports

Ind vs AusA: டிராவில் முடிந்த பகலிரவு பயிற்சி ஆட்டம்! - மெக்டெர்மொட்

இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதிய பகலிரவு பயிற்சி ஆட்டம் முடிவின்றி அமைந்ததால், ஆட்டம் டிராவானதாக அறிவிக்கப்பட்டது.

India dominate drawn pink-ball tour game in Sydney

author img

By

Published : Dec 13, 2020, 6:51 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான பகலிரவு பயிற்சி ஆட்டம் நேற்று முன்தினம் (டிச.11) சிட்னியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனோடு முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.

இதைத்தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் ஆகியோரின் சதத்தால், ஆட்டநேர முடிவில் 386 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் ஹனுமா விஹாரி 104 ரன்களுடனும், ரிஷப் பந்த் 103 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணியின் தொடக்க வீரர்கள் மார்கஸ் ஹாரிஸ், ஜோ பர்ன்ஸ் ஆகியோர் முகமது ஷமியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து வந்த நிக் மேடிசனும் 14 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.

  • The Indian quicks have started strongly with @MdShami11 picking 2 wickets from his 6 overs and Mohd. Siraj striking in his first over. The top three batsmen are back in the hut.

    Australia A are 29-3 and need 444 runs to win. #TeamIndia pic.twitter.com/7d6M0eM9F7

    — BCCI (@BCCI) December 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பின்னர் ஜோடி சேர்ந்த மெக்டெர்மொட் - அலெக்ஸ் கேரி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இந்த ஜோடி அரைசதம் கடந்தும் அசத்தியது. இதில் 58 ரன்களை எடுத்திருந்த அலெக்ஸ் கேரி, விஹாரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் மெக்டெர்மொட்டுடன் ஜோடி சேர்ந்த வைல்டர்மத் அதிரடியான ஆட்டதை வெளிப்படுத்தி அசத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த மெக்டெர்மொட் சதமடித்து அசத்த, அவரைத் தொடந்து வைல்டர்மெத்தும் சதமடித்து அசத்தினார்.

  • The three-day pink-ball game between Australia A and India ends in a draw.

    India 194 and 386/4d
    Australia 108 and 307/4

    📸📸 Courtesy: Getty Images Australia pic.twitter.com/vMZhk2WNuc

இதன் மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய ஏ அணி 307 ரன்களை குவித்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வைல்டர்மெத் 111 ரன்களையும், மெக்டெர்மொட் 107 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் மூன்று நாள் பகலிரவு பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: இரட்டை சதங்களின் நாயகன் ஹிட்மேன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.