ETV Bharat / sports

வங்கதேசத்தை மீண்டும் இன்னிங்ஸ் தோல்வியடையச் செய்த இந்தியா! - கேப்டன் விராட் கோலி 136 ரன்களை எடுத்தார்

கொல்கத்தா: இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

India won the match
author img

By

Published : Nov 24, 2019, 2:57 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. இதில் நேற்று முன்தினம் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவுப் போட்டியாக, கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டனில் நடைபெற்று வந்தது.

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால், வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் புஜாரா, கேப்டன் விராட் கோலி, அஜிங்கியா ரஹானே ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் புஜாரா 55 ரன்களில் வெளியேற, ரஹானே அரை சதமடித்த உடனே வெளியேறினார். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி சதம் அடித்து அசத்தினார்.

  • 20th Test century as Captain of India ✅
    27th Test century of his career ✅
    70th International century ✅
    41st international century as captain (joint-most)✅
    1st Indian to hit a century in day/night Test ✅#KingKohli pic.twitter.com/q01OKPauOu

    — BCCI (@BCCI) November 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 347 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 136 ரன்களை எடுத்தார். வங்கதேச அணி சார்பில் அல் அமீன் ஹொசைன், எபதத் ஹொசைன் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு மீண்டும் சவால் அளிக்கும் விதத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் மிரட்டினர். அந்த அணியின் முஷ்பிகூர் ரஹீமைத் தவிர, மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதன் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் முஷ்பிகூர் ரஹீம் 74 ரன்களை அடித்தார். இந்தியா அணி சார்பில் உமேஷ் யாதவ் ஐந்து விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி, நான்காவது முறையாக இன்னிங்ஸ் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது. இந்தத் தொடரில் சிறப்பாக பந்து வீசிய இஷாந்த் சர்மா ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் படிங்க: கிரிக்கெட்டில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து அசத்திய மேக்ஸ்வெல்

Intro:Body:

India won the match

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.