ETV Bharat / sports

முதலாவது ஒருநாள்: டீன் ஜோன்ஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தவுள்ள வீரர்கள்! - இந்தியா - ஆஸ்திரேலியா

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியின்போது மறைந்த கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸிற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக கறுப்புப் பட்டை அணிந்து, மௌன அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

India, Australia players to wear armbands during 1st ODI in honour of Dean Jones

author img

By

Published : Nov 26, 2020, 10:29 PM IST

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் மறைவிற்கு அஞ்சல் செலுத்தும்வகையில் இருநாட்டு வீரர்களும் கையில் கறுப்புப் பட்டை அணிந்தபடி, போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நட்சத்திர வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ், கடந்த செப்டம்பர் மாதம் மும்பையிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது இறப்புக்குப் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கேசிஏ டி20 தொடரில் பங்கேற்கும் ஸ்ரீசாந்த்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.