இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது நாதன் லயன் வீசிய பந்து புஜாராவின் பேட்டில் பட்டதுபோல் சப்தம் கேட்கே, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் சக வீரர்கள் போட்டிநடுவரிடம் விக்கெட் கேட்டனர்.
ஆனால் போட்டி நடுவர் அது விக்கெட் இல்லை என்று உறுதியாகத் தெரிவித்தார். இதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் டிஆர்எஸ் முறைப்படி மேல்முறையீடு செய்தனர்.
அப்போது போட்டி நடுவரின் முடிவு சரியானது என அறிவிக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், விக்கெட் கீப்பிங்கின் போது போட்டி நடுவரை விமர்சிப்பது அங்கிருந்த ஸ்ட்ம்பு மைக்கில் பதிவானது.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஐசிசி நடத்தை விதிகளின் படி தவறு என்றும், இச்செயலுக்காக ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்னுக்கு அபராதம் வாழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்போட்டியில் முதல் இன்னிங்ஸை விளையாடிவரும் இந்திய அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மூன்றாவது டெஸ்ட்: தடுமாற்றத்தில் இந்தியா!