இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15ஆம் தேதி முதல் பிரிஸ்பேனில் தொடங்கவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஜஸ்டீன் லங்கர், நான்காவது டெஸ்ட் போட்டியில் வில் புகோவ்ஸ்கி அணியில் இடம்பெற மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய லங்கர், "மூன்றாவடு டெஸ்ட் போட்டியின் போது இளம் தொடக்க வீரர் வில் புகோவ்ஸ்கிக்கு தோல்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் மைதானத்திலிருந்து வெளியேறிய புகோவ்ஸ்கிக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவரது காயம் தீவிரமடைந்துள்ளது. இதனால் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் புகோவ்ஸ்கி இடம்பெறுவது சந்தேகம் தான். மேலும் அவருக்கு மாற்று தொடக்க வீரராக மார்கஸ் ஹாரிஸ் களமிறங்குவார்" என்று தெரிவித்தார்.
அதன்பின் அணியின் கேப்டன் டிம் பெய்ன்னின் கேப்டன்சி குறித்து பேசிய லங்கர், "டிம் பெய்ன் மீது எனக்கு அதிகளவு நம்பிக்கை இருக்கிறது. அவர் தனது பொறுப்பை சிறப்பாகவே செய்து வருகிறார். ஆனால் அது அவருக்கான நாளாக அமையவில்லை.
இருப்பினும் அவர் தனது முயற்சிகளில் பின் தங்கியிருப்பது நன்றாகத் தெரிகிறது. ஏனெனில் தோல்வியடையும் போது நாங்கள் விமர்சிக்கப்படுவோம் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் டிம் பெய்ன் சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. இதிலிருந்து மீள்வதற்கான அனைத்து திறனும் அவரிடம் உள்ளது. அதனால் அவர் இன்னும் சிறிது காலம் அணியின் கேப்டனாக நீடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
அதேபோல் மூன்றாவது போட்டியின் போது ஸ்டீவ் ஸ்மித் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஸ்மித்தைப் பற்றி அறிந்த அவரும் இதனை ஏற்க மாட்டனர். ஏனெனில் அவர் ஒரு நகைச்சுவை எண்ணம் கொண்டவர். அவர் எப்போது மைதானத்தில் தனது நகைச்சுவை திறனை வெளிப்படுத்துவது அனைவரும் அறிந்த ஒன்றே. அவரின் செயல்களை கண்டு நாங்கள் சிரித்துகொண்டிருந்தோம், ஆனால் அது சிலரின் பார்வையில் தவறாக தோன்றுகிறது.
ஒரு விநாடியேனும் ஸ்மித் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டார் என்றால் அவர், உடனடியாக மைத்தானத்தை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் மற்ற வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார். மேலும் அந்த கிரீஸ் ஒரு கான்கிரீட்டைப் போன்றது. அதில் அவரது செயல் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதனால் ஒருவரை எப்போதும் தவறாக எண்ண வேண்டாம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 100ஆவது டெஸ்ட்டில் களமிறங்கும் லயன்!