ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ரன்களை கட்டுப்படுத்த முடியாத விரக்தியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 30 யார்டு சர்க்கிளில் அமைக்கப்பட்டிருந்த குறியீடுகளை உதைத்து தள்ளினார்.
இதனை கிரிக்கெட் பத்திரிகையாளர் பரத் சுந்தரேசன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது பும்ராவின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
முன்னதாக இத்தொடரின் முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, வழக்கத்திற்கு மாறாக ரன்களை வாரிவழங்கியிருந்தார்.
-
A very frustrated Jasprit Bumrah has now kicked two of the 30-yard fielding markers away with great angst. Not a good look this #ausvind @cricbuzz pic.twitter.com/ZbPSJEYJSe
— Bharat Sundaresan (@beastieboy07) November 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A very frustrated Jasprit Bumrah has now kicked two of the 30-yard fielding markers away with great angst. Not a good look this #ausvind @cricbuzz pic.twitter.com/ZbPSJEYJSe
— Bharat Sundaresan (@beastieboy07) November 29, 2020A very frustrated Jasprit Bumrah has now kicked two of the 30-yard fielding markers away with great angst. Not a good look this #ausvind @cricbuzz pic.twitter.com/ZbPSJEYJSe
— Bharat Sundaresan (@beastieboy07) November 29, 2020
இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், “இத்தொடரில் பந்துவீச்சாளர்களின் ஆட்டம் சிறப்பாக அமையவில்லை என நினைக்கிறேன்.
அதனால் எங்களால் குறிப்பிட்ட ரன்களுக்குள் எதிரணியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.மேலும் அவர்கள் வலுவான பேட்டிங் வரிசையைப் பெற்றுள்ளனர். அவர்களால் ஆட்டத்தின் சூழலிற்கேற்ப விளையாட முடிந்தது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:AUS VS IND: பணிச்சுமை குறித்து மனம் திறந்த ஸ்ரேயாஸ்!