ETV Bharat / sports

2ஆவது ஒருநாள் போட்டி: கரன், ஆர்ச்சர் பந்துவீச்சில் வீழ்ந்த ஆஸி.,! - சாம் கர்ரன்

மான்செஸ்டர்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

england-mount-incredible-fightback-to-level-series-against-australia

author img

By

Published : Sep 14, 2020, 1:19 PM IST

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய 19 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (செப்.13) மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

விக்கெட் வீழ்த்திய மகிச்சியில் ஆடம் ஸாம்பா
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆடம் ஸாம்பா

அதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் மோர்கன் - ஜோ ரூட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த ஜோ ரூட் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து இயன் மோர்கனும் 42 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்கள், எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறினார்.

டாம் கர்ரன் - அதில் ரஷீத்
டாம் கரன் - அதில் ரஷீத்

இறுதியில் டாம் கரன், அதில் ரஷீத் இணை அதிரடியாக விளையாடி அணிக்கு பலம் சேர்த்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டையும், ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில், டேவிட வார்னார் 6 ரன்களுடன் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டோனிஸும் 9 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் அதிராடியாக விளையாடி வந்த கேப்டன் ஆரோன் ஃபின்ச், அரை சதமடித்து அசத்தினார்.

ஆரோன் ஃபின்ச்
ஆரோன் ஃபின்ச்

பின்னர் 73 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பின்ச் தனது விக்கெட்டை இழந்து வெளியேறியதும், ஆஸ்திரேலிய அணியின் தோல்வி உறுதியானது. ஆர்ச்சர், வோக்ஸ், சாம் கரன் ஆகியோரது சிறப்பான பந்துவீச்சினால் ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை மட்டுமே எடுத்தது.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் சாம் கர்ரன்

இதன்மூலம் இங்கிலாந்து அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:இன்றுடன் முடிவுக்கு வந்த ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தடை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.