ETV Bharat / sports

2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்வரை கிரிக்கெட் ஆடவுள்ள தோனி: ரசிகர்கள் மகிழ்ச்சி! - ஐபிஎல் 2021

இந்திய அணியின் முக்கிய வீரரான தோனி ஓய்வை அறிவிக்கப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2021ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடர்வரை ஆடவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

dhoni-wont-retire-till-ipl-2021-wants-chennai-super-kings-to-release-him-report

author img

By

Published : Nov 28, 2019, 8:53 AM IST

இந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடருக்கு பின் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருக்கும் தோனி, ஓய்வை அறிவிக்கப்போவதாக பல வதந்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடர் மட்டுமல்லாது, 2021ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக தோனி ஆடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தோனி
தோனி

இதுகுறித்து சிஎஸ்கே நிர்வாகி ஒருவர் பேசுகையில், “2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பெரும் ஏலம் நடக்கவுள்ளது. அந்த ஏலத்தில் தோனி பங்கேற்க ஆர்வம் தெரிவித்துள்ளார். அந்த ஏலத்தில் ரைட் டூ மேட்ச் கார்டு (Right to Match Card) என்ற விதிமுறையின் கீழ் சென்னை அணிக்கு ஆடுவார். இதன்மூலம் சென்னைக்கு அணிக்காக ஆடுவதற்கு பெறவுள்ள தொகையை தோனி குறைத்துள்ளார். ஆனால் சிஎஸ்கே நிர்வாகத்தினர்,தோனியை ஏலத்தில் விடுவதற்கு தயாராக இல்லை என்றார்.

ஓய்வு பெறபோகிறார் எனக் கூறப்பட்ட நிலையில், இன்னும் இரண்டு ஐபிஎல் தொடர்கள் ஆடவுள்ள தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஜாம்பவான் ஹைடன்#HBDHaydos

Intro:Body:

ee

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.