ETV Bharat / sports

சிபிஎல் 2020 : அரங்கை அதிரவைக்கக் காத்திருக்கும் ஐந்து வீரர்கள்! - ஐபிஎல்2020

கரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் நடைபெறவுள்ள மிகப்பெரிய டி20 தொடரான கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) தொடரில், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐந்து வீரர்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

cpl-2020-five-players-to-watch-out-for
cpl-2020-five-players-to-watch-out-for
author img

By

Published : Aug 11, 2020, 6:22 PM IST

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அச்சத்துக்கு இடையே புகழ்பெற்ற டி20 கிரிக்கெட் லீக் தொடர்களில் ஒன்றான கரீபியன் பிரீமியர் லீக், வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 10ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் மொத்த 33 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இத்தொடரில் நடைபெறவுள்ள போட்டிகள் அனைத்தும் பார்வையாளர்களின்றி டரொபாவிலுள்ள பிரெயன் லாரா கிரிக்கெட் அகாதெமி மைதானத்திலும், குயின் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டின் சீசனுக்கான முதல் போட்டி கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்த கயானா அமேசான் வாரியார்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் - செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளது.

இத்தொடரில் பெரும் எதிர்ப்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் ஐந்து வீரர்கள் குறித்து தற்போது காணலாம்.

கிறிஸ் லின் (செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ்)

டி20 கிரிக்கெட் போட்டிகளில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின். இந்நிலையில் சிபிஎல் தொடரின் ஜமைக்கா தல்லாவாஸ், கயனா அமேசான் வாரியர்ஸ், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளில் விளையாடியுள்ள கிறிஸ் லின், இந்த சிபிஎல் சீசனில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். மேலும் டி20 போட்டிகளில் இவரது விகிதாசரம் 144.15ஆக உள்ளது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கிறிஸ் லின் விளையாடவுள்ளதாலும், இவர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஓஷேன் தாமஸ் (ஜமைக்கா தல்லாவாஸ்)

ஓஷேன் தாமஸ் (ஜமைக்கா தல்லாவாஸ்)
ஓஷேன் தாமஸ் (ஜமைக்கா தல்லாவாஸ்)

வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் ஓஷேன் தாமஸ். கடந்த 2017ஆம் ஆண்டு சிபிஎல் தொடரின் ஜமைக்கா தல்லாவாஸ் அணிக்காக அறிமுகமான ஓஷேன் தாமஸை, இந்த ஆண்டும் அந்த அணி தக்கவைத்துள்ளது. இதனால் இவர் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

ஜேசன் ஹோல்டர் (பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ்)

ஜேசன் ஹோல்டர் (பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ்)
ஜேசன் ஹோல்டர் (பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ்)

வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் கேப்டனாகத் திகழ்பவர் ஜேசன் ஹோல்டர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தவிர்க்க முடியா வீரராக வலம் வரும் ஹோல்டர், சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தனது திறனை வெளிப்படுத்தி அசத்தினர். ஆல்ரவுண்டரான ஹோல்டர், பேட்டிங், பந்துவீச்சு ஆகியவற்றில் அணியின் பலம் வாய்ந்த வீரராகக் காணப்படுகிறார். இவர் தனது திறனை சரியாக வெளிப்படுத்தும் பட்சத்தில் பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றுவதை யாராலும் தடுக்க இயலாதென ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

ராஸ் டெய்லர் (கயானா அமேசான் வாரியர்ஸ்)

ராஸ் டெய்லர் (கயானா அமேசான் வாரியர்ஸ்)
ராஸ் டெய்லர் (கயானா அமேசான் வாரியர்ஸ்)

நியூசிலாந்து அணியின் அனுபவம் நிறைந்த வீரர் ராஸ் டெய்லர். கடந்த ஆண்டு சிபிஎல் தொடரிலிருந்து விலகியிருந்த டெய்லர், தற்போது மீண்டும் கயானா அணிக்காக கம்பேக் தரவுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இவரது அனுபவமும், அதிரடியான பேட்டிங் திறனும் கயானா அணிக்கு நிச்சயம் வெற்றியை தேடித்தரும் என்பதில் சந்தேகமில்லை.

பிரவீன் தம்பே (டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்)

இந்தியாவைச் சேர்ந்த 48 வயதான சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் தம்பே. இவர் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக சிபிஎல் தொடரில் அறிமுகமாகவுள்ளார். இதன் மூலம் சிபிஎல் தொடரில் அறிமுகமாகும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் தம்பே பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த தாம்பே, இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் அடிப்படை விலைக்கே வாங்கப்பட்டார்.

பிரவீன் தம்பே (டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்)
பிரவீன் தம்பே (டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்)

இவர் கடந்த ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற டி10 லீக் கிரிக்கெட் தொடரில் பிசிசிஐயின் அனுமதியை பெறாமல் பங்கேற்றதைத் தொடர்ந்து, வரும் சீசனுக்கான ஐ.பி.எல் போட்டியில் விளையாட இவருக்கு பிசிசிஐ தடை விதித்தது. இதையடுத்து இவர் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் தொடர் மூலம் மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.