கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்திய அரசு பொதுமக்களை வெளியில் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பிரமர் நரேந்திர மோடியும், மார்ச் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கைப் பின்பற்றவேண்டுமெனவும் வேண்டுகோள்விடுத்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக இந்திய கிரிக்கெ அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் இணைந்து, தங்களது ட்விட்டரில் கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். இது குறித்து அனுஷ்கா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தக் காணொலியில், "நாம் அனைவரும் தற்போது மிகவும் கடினமான சூழ்நிலையைச் சந்தித்துவருகிறோம். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான ஒரேவழி நாம் ஒன்றாகச் செயல்படுவதே.
நாங்கள் எங்கள் பாதுகாப்பிற்காகவும், மற்றவர்கள் பாதுகாப்பிற்காவும் வீட்டிலேயே தங்கியுள்ளோம். அதேபோல் நீங்களும் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க உங்களைப் பாதுகாத்துக்கொள்ள தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டிலேயே இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள்" என வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
-
Stay Home. Stay Safe. Stay Healthy. 🙏🏻 pic.twitter.com/UNMi2xQbbz
— Anushka Sharma (@AnushkaSharma) March 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Stay Home. Stay Safe. Stay Healthy. 🙏🏻 pic.twitter.com/UNMi2xQbbz
— Anushka Sharma (@AnushkaSharma) March 20, 2020Stay Home. Stay Safe. Stay Healthy. 🙏🏻 pic.twitter.com/UNMi2xQbbz
— Anushka Sharma (@AnushkaSharma) March 20, 2020
கோவிட்-19 பெருந்தொற்றினால் இதுவரை இந்தியாவில் 206 பேர் பாதிக்கப்பட்டும், ஐந்து பேர் உயிரிழந்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மார்ச் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கு - பிரதமர் மோடி வேண்டுகோள்!