இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பராக இருந்தவர் சபா கரீம். இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொதுமேலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் பிசிசிஐ-இன் பிற உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அதனை உறுதிப்படுத்துவதன் வகையில் கரீம், பிசிசிஐ-இன் பொதுமேலாளர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் பிசிசிஐ தரப்பில் இதற்கான உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. மேலும் பிசிசிஐயின் அடுத்த பொதுமேலாளர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படவுள்ளார் என்பது குறித்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
பிசிசிஐயின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோஹ்ரியின் மேற்பார்வையில் சபா கரீம், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிசிசிஐயின் பொதுமேலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு ஜோஹ்ரி தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிய ஒரு வாரத்திற்குப் பிறகு, சபா கரீம் பிசிசிஐலிருந்து வெளியேறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.