அபுதாபியில் டி10 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், மாரத்தா அரேபியன்ஸ் அணியின் கேப்டனாக விளங்கும் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அபுதாபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் 30 பந்துகளில் 9 பவுண்டரி, 7 சிக்சர் என 90 ரன்கள் அடித்து அசத்திய அவர், நேற்றைய ஆட்டத்திலும் பேட்டிங்கில் காட்டடி அடித்து அசத்தியுள்ளார்.
இந்த டி10 தொடரில் டெல்லி புல்ஸ் - மாரத்தா அரேபியன்ஸ் அணிகளுக்கு இடையேயான 19ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபியில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற டெல்லி புல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கிறிஸ் லின் இருக்கும் போது தாங்கள் எடுத்த முடிவு தவறு என்பது அப்போது அந்த அணிக்கு தெரியாமல் போனது.
இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த மராத்தா அரேபியன்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கிறிஸ் லின், டெல்லி புல்ஸ் அணியின் பந்துவீச்சை சிக்சர்களாக பறக்கவிட்டார். 33 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட அவர் ஒன்பது சிக்சர்கள், ஐந்து பவுண்டரிகள் என 89 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், மரத்தா அரேபியன்ஸ் அணி 10 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை குவித்தது.
பின்னர், 147 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த டெல்லி புல்ஸ் அணி 10 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், மரத்தா அரேபியன்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் இப்போட்டியில் வெற்றிபெற்றது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய குசால் பெரேரா 45 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார்.
-
Yet another commanding performance! Congratulations Maratha Arabians!#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #marathaarabians #delhibulls pic.twitter.com/HFEULlzT24
— T10 League (@T10League) November 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Yet another commanding performance! Congratulations Maratha Arabians!#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #marathaarabians #delhibulls pic.twitter.com/HFEULlzT24
— T10 League (@T10League) November 21, 2019Yet another commanding performance! Congratulations Maratha Arabians!#AbuDhabiT10 #t10league #t10season3 #inabudhabi #AldarProperties #marathaarabians #delhibulls pic.twitter.com/HFEULlzT24
— T10 League (@T10League) November 21, 2019
இப்போட்டியில் 89 ரன்கள் அடித்து அசத்திய கிறிஸ் லின் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியின் மூலம் மராத்தா அரேபியன்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு போட்டி முடிவு இல்லை என நான்கு புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் முதலிடத்தில் உள்ளது. டி10 தொடரில் அதிரடியாக விளையாடும் கிறிஸ் லின், நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.