ETV Bharat / sports

எஸ்பிபி மற்றும் டீன் ஜோன்ஸ் மறைவால் கருப்பு ஆர்ம் பேண்ட் அணிந்த சென்னை வீரர்கள்...!

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் டீன் ஜோன்ஸ் ஆகியோர் மறைந்த நிலையில், அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக சென்னை அணி வீரர்கள் கருப்பு ஆர்ம் பேண்ட் அணிந்து போட்டியில் பங்கேற்றனர்.

chennai Super Kings are wearing black armbands in memory of Dean Jones and SP Balasubramanyam

author img

By

Published : Sep 26, 2020, 6:13 AM IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ். 59 வயதாகும் இவர், வர்ணனையாளராக பல போட்டிகளில் பங்கேற்றவர். இவர் நேற்று முன் தினம் உயிரிழந்த நிலையில், கிரிக்கெட் உலகமே இரங்கல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய சினிமாவின் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று உயிரிழந்தார்.

முக்கிய பிரபலங்களின் உயிரிழப்பால் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், இருவரது மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர்கள் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கருப்பு ஆர்ம் பேண்ட் அணிந்து விளையாடினர்.

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் ட்விட்டர் பக்கத்தில், ''டீன் ஜோன்ஸ் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மறக்க முடியாத ஆட்டத்தை ஆடினார். அதேபோல் எஸ்பிபி குரல் பலரின் வாழ்க்கையை மாறியுள்ளது. நம் அனைவரையும் பல வழிகளில் வடிவமைத்துள்ளது'' என பதிவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் வரலாற்றின் புதிய தொடக்கம்! - #T20WorldCup2007Rewind

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.