நியூசிலாந்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் 47 ரன்களில் நீஷம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அப்போது அவர் கோபத்தில் போட்டியின் நடுவர்களை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளைக் கூறியதாக அவர் மீது புகார் எழுந்தது. மேலும் அவர் கூறிய வார்த்தைகளை ஸ்டம்பில் பொறுத்தப் பட்டிருந்த மைக் மூலமும் தெளிவாகக் கேட்டதாகவும் போட்டி நடுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் ஜானி பேர்ஸ்டோ மீது ஐசிசியின் முதல் நிலை குற்றத்திற்கான புள்ளியை போட்டி நடுவர்கள் அவருக்கு வழங்கியுள்ளனர். இதன் மூலம் பேர்ஸ்டோவிற்கு குறைந்த பட்ச தண்டனையாக போட்டியின் சம்பளத்திலிருந்து ஐம்பது சதவிகித கட்டணம் அபராதமாக விதிக்கப்படும்.
இல்லையெனில் அதிபட்ச தண்டனையாக ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் விளையாட தடை மற்றும் இரண்டு மதிப்பிழப்பு புள்ளிகள் விதிக்கப்படலாம் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஐசிசி ரேங்கிங்ஸ்: டி20 கிரிக்கெட் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!