இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் சதம் மற்றும் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
இதன் காரணமாக இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான்களான அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோரைக் காட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான ஸ்டிரைக் ரேட் , சராசரியில் முன்னிலை வகிக்கிறார்.
இதுவரை 76 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடிவுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், 2,626 ரன்களும், 394 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதில் ஐந்து சதங்கள், 11 அரைசதங்கள், 29 முறை ஐந்து விக்கெட்டுகளும் அடங்கும்.
இதன் மூலம் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 53.6 ஸ்டிரைக் ரேட்டையும், 24.27 சராசரியையும் கொண்டுள்ளார். அதேசமயம் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான அனில் கும்ப்ளே டெஸ்ட் கிரிக்கெட் ஸ்டிரைக் ரேட்டாக 65.9 புள்ளிகளையும், சராசரியாக 29.65 புள்ளியைம் பெற்றுள்ளார்.
மேலும் மற்றொரு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஸ்டிரைக் ரேட்டாக 68.5 புள்ளியையும், சராசரியாக 32.46 புள்ளிகளையும் கொண்டுள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த ஸ்டிரைக் ரேட் மற்றும் சாராசரியைக் கொண்ட இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி முன்னேற்றம்!