ETV Bharat / sports

’சூப்பர்மேன்’ ஸ்மித், ’பேட்மேன்’ கம்மின்ஸ்; பாண்டிங், கிளார்க் செய்யாததை இங்கிலாந்தில் சாதித்துக் காட்டிய பெய்ன்...! - smith double century in ashes

மான்செஸ்டர்: நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துள்ளது.

வெற்றிக் களிப்பில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள்
author img

By

Published : Sep 8, 2019, 11:50 PM IST

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெறும் கிரிக்கெட் திருவிழாதான் ஆஷஸ் தொடர். இரு நாட்டு ரசிகர்களும் அரங்கம் அதிரும்படி கத்தி ஆரவாரத்துடன் ஒரு திருவிழாவாகதான் ஆஷஸை கொண்டாடுவார்கள். ஏனெனில், மற்ற நாட்டு டெஸ்ட் தொடரைக் காட்டிலும் ஆஷஸ் தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்றுமே ஸ்பெசல் தான்.

இந்த ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆஷஸ் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், நான்காவது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றதால், அடுத்த போட்டியில் வெற்றிபெற்று முன்னிலை பெறப்போவது யார் என்பதற்கான போட்டியாக நான்காவது போட்டி அமைந்தது.

4th ashes 2019
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள்

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தலையில் காயம்பட்ட பின் மீண்டும் அணிக்குத் திரும்பிய ஸ்மித் முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டார். மார்னஸ், டிம் பெய்ன், ஸ்டார்க் ஆகியோரின் அரைசதத்தால் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 497 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது.

4th ashes 2019
ஸ்மித்தின் வித்தியாசமான ஷாட்

அதன்பின், முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியின் ஒருசில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலே ஆட்டமிழந்தனர். அந்த அணியின் ரோரி பர்ன்ஸ் 81 ரன்களும், ஜோ ரூட் 71 ரன்களும், ஜோஸ் பட்லர் 41 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், 301 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இங்கிலாந்து இழந்தது. இதனால், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை விட 196 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து பவுலர்களின் ஆதிக்கம் தொடரவே, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

4th ashes 2019
பேர்ஸ்டோ

இருப்பினும், ஸ்மித் மட்டும் நீண்ட நேரம் களத்தில் நின்று 82 ரன்கள் எடுத்தார். பின்னர் 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது. கடினமான இலக்கான 384 ரன்களை எதிர்த்து ஆட வந்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முந்தைய இன்னிங்ஸில் ஓரளவு தாக்குப்பிடித்த ரோரி பர்ன்ஸும், ஜோ ரூட்டும் ரன் எடுக்காமலே ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தனர். இருவரையும் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு அனுப்பி கம்மின்ஸ் கெத்து காட்டினார்.

4th ashes 2019
போல்ட்டான ஆஸ்திரேலிய வீரர்

அதன்பின் வந்த டென்லியும் ஜெசன் ராயும் சிறிது நேரம் நிதானமாக ஆடினர். ஆனாலும், ராயின் விக்கெட்டை கம்மின்ஸ் வீழ்த்தினார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற பென் ஸ்டோக்ஸ் இந்த போட்டியிலும் செய்வார் என நினைத்திருந்த ரசிகர்களின் நினைப்பில் கம்மின்ஸ் மண்ணள்ளிப் போட்டார்.

4th ashes 2019
பந்தை அமுக்கும் ஆஸ்திரேலிய வீரர்

ஸ்டோக்ஸை ஒரு ரன்னில் கம்மின்ஸ் காலி செய்தார். அப்போதே ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பினாலும், பேர்ஸ்டோ மற்றும் பட்லர் ஆகிய இருவர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அவர்களும் குறைவான ரன்களிலே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். நிதானமாக ஆடிய டென்லியும் 53 ரன்களில் லயன் சுழலில் சிக்கிக் கொண்டார்.

4th ashes 2019
வெற்றிக் களிப்பில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள்

இதனையடுத்து, ஆட்டம் முழுவதும் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றிதான் பெறவில்லை, ட்ராவாவது செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்தும் பலனில்லை. இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியாமல் 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி ஆஷஸை தக்கவைத்தது. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்குக்கு அடுத்து இங்கிலாந்தில் ஆஷஸை தக்க வைத்த பெருமையை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பெற்றுள்ளார். முன்னாள் கேப்டன்களாக இருந்த ரிக்கி பாண்டிங், கிளார்க் ஆகியோர் செய்ய முடியாததை டிம் பெய்ன் செய்துகாட்டியுள்ளார்.

4th ashes 2019
டிம் பெய்ன்

கடைசிப் போட்டியில் இங்கிலாந்து அணி கட்டாயமாக வெற்றிபெற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே 2-2 என்ற சமநிலையை அடைய முடியும், இல்லையெனில் ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலிய அணி தட்டிப் பறித்துச் செல்லும்!

Intro:Body:

#ashes Result 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.